»   »  'முதல்ல தேர்தல் நடக்குதா பாரு...'- சிம்புவின் இந்த சவால் விஷாலுக்கா, நீதிமன்றத்துக்கா??

'முதல்ல தேர்தல் நடக்குதா பாரு...'- சிம்புவின் இந்த சவால் விஷாலுக்கா, நீதிமன்றத்துக்கா??

Posted By:
Subscribe to Oneindia Tamil

'நடிகர் சங்கத்துக்கு முதல்ல தேர்தல் நடக்குதான்னு பார்க்கலாம்...' - திரையுலகை பரபரப்புக்குள்ளாக்கி வரும் நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது சிம்புவின் இந்த புதிய சவால்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, அளவுக்கு மீறி உணர்ச்சி வசப்பட்டு விஷால் போன்றோரை அடா புடா என ஒருமையில் பேசினார் சிம்பு. மேடையில் அமர்ந்திருந்த பாக்யராஜே ஒரு நிமிடம் ஆடிப் போய், "சிம்பு கொஞ்சம் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கிட்டுப் பேசணும்' என்று அட்வை பண்ணார்.

Simbu questioned the court?

பின்னர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த சிம்பு திடீரென, "முதல்ல தேர்தல் நடக்குதான்னு பார்க்கலாம்டா" என்றார் கோபத்துடன்.

சிம்புவின் இந்த சவால் யாரை நோக்கி என்பதுதான் இப்போதைய கேள்வி.

காரணம், இந்த தேர்தலை அறிவித்திருப்பது சென்னை உயர்நீதிமன்றம். தேர்தலை நடத்தப் போகிறவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பத்மனாபன்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கவிருக்கும் இந்தத் தேர்தலைத் தடுத்து நிறுத்த சிம்பு ஏதும் திட்டம் வைத்திருக்கிறாரா?

அப்படி திட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சிம்புவின் இந்தக் கேள்வி நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? என திருப்பிக் கேட்கிறார்கள் விஷால் அணியினர்.

English summary
Actor Simbu questioned whether the election for Nadigar Sangam would happen as per plan?
Please Wait while comments are loading...