For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நீண்ட தாடி...ரஜினி ஸ்டைல் நடை...மாஸ் கெட்அப்...மிரட்டும் சிம்புவின் புதிய வீடியோ

  |

  சென்னை : சர்ச்சை, பிரச்சனை. எதிர்ப்புக்களை கடந்து மீண்டும் ஃபாமுக்கு திரும்பி உள்ளார் சிம்பு. அதற்கு அடையாளமாக இந்த ஆண்டு துவக்கத்தில் அவர் நடித்த ஈஸ்வரன் படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பயங்கர ஸ்லிம்மாகி அனைவரையும் மிரள வைத்திருந்தார்.

  உருவத்தில் மட்டுமல்ல நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறியும் படி, வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தின் ஷுட்டிங்கிற்கு சொன்ன நேரத்திற்கு வந்து, படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து கொடுத்துள்ளார் சிம்பு. பல ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு ஆக்டிவாகி உள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  சொந்தக்காரங்க என்னை ஆபாச நடிகைன்னு தான் கூப்பிடுறாங்க; கண்ணீர் வடித்த பிக் பாஸ் பிரபலம்சொந்தக்காரங்க என்னை ஆபாச நடிகைன்னு தான் கூப்பிடுறாங்க; கண்ணீர் வடித்த பிக் பாஸ் பிரபலம்

  சோஷியல் மீடியாவிலும் படுஆக்டிவாக மாறினார் சிம்பு. இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும், ஃபோட்டோக்கள், வீடியோக்கள் என அனைத்தும் வைரலாக்கப்பட்டு வருகிறது. காசியில் கங்கையில் பூஜை செய்தது, காதல் தினத்தில் நாய்குட்டியிடம் புலம்பியது, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தது, த்ரோ பேக் ஃபோட்டோ வெளியிடுவது, சமையல் வீடியோ வெளியிடுவது என அனைவரையும் கவர்ந்து வந்தார் சிம்பு.

  ஸ்லிம்மான சிம்பு

  ஸ்லிம்மான சிம்பு

  மாநாடு படத்தின் ஷுட்டிங்கை முடித்த உடனேயே கவுதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்க போய் விட்டார் சிம்பு. இந்த படத்திற்கு கடுமையாக ஒர்க்அவுட் செய்து 15 கிலோ எடையை குறைத்துள்ளார் சிம்பு. குண்டான தனது பழைய ஃபோட்டோவுடன், ஸ்லிம்மான லேட்டஸ்ட் ஃபோட்டோவையும் சேர்த்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் சிம்பு.

  சஸ்பென்ஸ் வைக்கும் கவுதம் மேனன்

  சஸ்பென்ஸ் வைக்கும் கவுதம் மேனன்

  தொடர்ந்து க்ளீன் சேவ் செய்த முகத்துடன், சின்ன பையன் போன்ற கெட்டப்பில் இருக்கும் ஃபோட்டோவையும் வெளியிட்டார். இதனால் வெந்து தணிந்தது காடு படத்திற்காக சிம்பு இப்படி மாறி உள்ளார் என்றார்கள். சிம்புவின் இந்த அடுத்தடுத்த பதிவுகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. முதலில் நதிகளிலேயே நீராடும் சூரியன் என்ற டைட்லை அறிவித்த கவுதம் மேனன், திடீரென படத்தின் டைட்டில், கதை என அனைத்தையும் மாற்றி உள்ளார். இதற்கு என்ன காரணம் எனவும் தெரியவில்லை. இதனால் வெந்து தணிந்தது காடு படத்தின் கதை, சிம்புவின் ரோல் என எதையும் கணிக்க முடியாமல் அனைவரும் குழப்பமடைந்துள்ளனர்.

  மிரட்டும் அசத்தல் வீடியோ

  இந்நிலையில் சிம்பு லேட்டஸ்டாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ, அனைவரையும் மேலும் குழப்பி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் க்ளீன் சேவ் செய்த ஃபோட்டோவை போட்டிருந்தார். தற்போது நீண்ட தாடியுடன் வேற மாதிரி கெட்அப்புக்கு மாறி உள்ளார். கூல் கிளாசுடன் ரஜினி ஸ்டையிலில் நடந்து வருவது போலவும், வாக்கிங் செல்வது போலவும், ஏரி கரையில் வேஷ்டி சட்டையில் திரும்பி நிற்பது போலவும் பல விதங்களில் இந்த வீடியோ அமைந்துள்ளது.

  ஆச்சரியத்தில் ரசிகர்கள்

  ஆச்சரியத்தில் ரசிகர்கள்

  இதனால் அதற்குள் எப்படிங்க இவ்வளவு நீளமா தாடி வளத்தீங்க. இந்த எந்த பட கெட்அப் என ரசிகர்கள் விடாமல் கேட்டு வருகின்றனர். சிம்பு நடிக்கும் மற்றொரு படமான பத்து தல படத்தின் கெட்அப் என சிலவும், இல்லை சிம்பு வேஷ்டியில் நிற்பதால் கிராமத்து கதையாக உருவாக்கப்படும் வெந்து தணிந்தது காடு படத்திற்காக தான் இருக்கும் என சிலரும் கூறி வருகின்றனர். கேள்விகள் எழுப்பப்பட்டாலும் இந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.

  எந்த பட கெட்அப் இது

  எந்த பட கெட்அப் இது

  படத்திற்கு படம் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து வரும் சிம்பு, மாநாடு படத்தில் இஸ்லாமிய இளைஞராக நடித்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தில் பாலா பட ஹீரோ போல உடல் எடையை குறைத்து கிராமத்து இளைஞராக நடிக்கிறார். தற்போது இந்த வீடியோவில் கிட்டதட்ட கொடி பட தனுஷ் கெட்அப்பிற்கு மாறி உள்ளார் சிம்பு. ஆனால் இது எந்த படத்திற்கான கெட்அப் என்று தான் தெரியவில்லை.

  English summary
  simbu's latest get up change video goes viral in social media. after weight loss photo, now simbu changed his get up again. fans celebrate this mass change of simbu.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X