»   »  ஃப்ரெண்ட்ஷிப் தான் முக்கியம்... பணம் வேண்டாம்!- சிம்பு

ஃப்ரெண்ட்ஷிப் தான் முக்கியம்... பணம் வேண்டாம்!- சிம்பு

Posted By: Rajiv
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் சிம்பு மீது குறை சொல்லாத ஆட்கள் மிக மிகக் குறைவு. ஏன் சிம்புவின் அப்பா டிஆர் கூட மகனைப் பற்றி குறை சொல்லியிருக்கிறார். எல்லாம் அலட்சியம், கால தாமதம், ஓவர் வாய் என்ற ரீதியில் இருக்கும்.

ஆனால் ஒரு விஷயத்தில் சிம்புவை யாரும் குறை சொல்ல முடியாது. அது நட்பு.

Simbu's respect for friendship

நட்புக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கும் சிம்புவின் நட்பு பட்டியலில் ஒருவர் இணைந்துவிட்டால் சிம்பு அவருக்கு அடிமையாகவே ஆகிவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் சிம்பு அசத்தியது விக்ரம் பிரபுவை.

விக்ரம் பிரபு - ஷாமிலி இணைந்து நடிக்கும் வீரசிவாஜி படத்துக்காக ஒரு பாடலை சிம்பு பாடினால் நன்றாக இருக்கும் எண்ணி இருக்கிறார்கள். விக்ரம் பிரபுவும் சிம்புவும் நண்பர்கள் என்பதால் விக்ரமே நேரடியாக கேட்க ஓகே சொல்லி பாடியும் கொடுத்துவிட்டார்.

பாடியதற்காக சம்பளமாக ஒரு தொகையை எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். சிம்பு அதை வாங்க மறுத்துவிட்டாராம்.

'இது என் ஃப்ரெண்ட் விக்ரம்பிரபுவுக்காக பாடியது. இதுக்கு எப்படி சம்பளம் வாங்குவேன்?' என கடைசி வரை வாங்கவே இல்லையாம்.

சிம்புவுக்குள் இப்படி ஒரு நல்ல குணமா என்று வியந்திருக்கிறார்கள். சிம்பு பாடிய அந்த 'தாறுமாறு தக்காளி சோறு...' பாடலுக்கு விக்ரம் பிரபுவும் ஷாம்லியும் ஜார்ஜியாவில் நடனம் ஆடியிருக்கிறார்கள்.

என்ன... பாடல் பதிவுக்கு சிம்பு வருவதற்குத்தான் ஒரு மணி நேரம் காலதாமதம் ஆகியிருக்கிறது. அதை மட்டும் மாத்திக்கிட்டீங்கன்னா நல்லாருக்குமே எஸ்டிஆர்?

English summary
Recently actor Simbu is refusing to get money for his work as playback singer in Veera Sivaji movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil