For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிக்ஸ் பேக்கில் அசத்தும் சிம்பு… வெந்து தணிந்தது காடு மாஸா போகுது… குஷியில் ரசிகர்கள் !

  |

  சென்னை : இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடிகர் சிம்புவின் சிக்ஸ் பேக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  STR என்ன பாலா பட HEROவா மாறிட்டாரு! அடையாளமே தெரியலயே Simbu | Oneindia Tamil

  சிம்பு மேல்சட்டை இல்லாமல், வெறும் லுங்கி மட்டுமே கட்டிக்கொண்டு அட்டகாசமாக போஸ் கொடுத்து இருக்கிறார். ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து வாயடைந்து போய் உள்ளனர்.

  தளபதி விஜய்யின் பீஸ்ட் டைட்டில் மாறுகிறதா? வரிச் சலுகையை எதிர்பார்த்தா மாற்றித்தானே ஆகணும்!தளபதி விஜய்யின் பீஸ்ட் டைட்டில் மாறுகிறதா? வரிச் சலுகையை எதிர்பார்த்தா மாற்றித்தானே ஆகணும்!

  இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழுவினர் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

  வெற்றிப்பெற்ற படம்

  வெற்றிப்பெற்ற படம்

  கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு முதன்முறையாக நடித்தத் திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இத்திரைப்படம் சிம்புவிற்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுத் தந்து சிம்புவின் ரேஞ்ஜையே மாற்றிய படம் என்றும் கூறலாம்.இப்படத்தில் த்ரிஷா ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்திருப்பார்.

  ஹிட்பாடல்கள்

  ஹிட்பாடல்கள்

  விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை தொடர்ந்து, அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி இணைந்தது. ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. இருப்பினும் இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

  கேங் ஸ்டார் படம்

  கேங் ஸ்டார் படம்

  சிம்புவின் திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. மேலும், இவர் படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இதனால், சிம்புவின் ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்து வந்தனர். இதையடுத்து மணிரத்னம் கேங் ஸ்டார் திரைப்படமான செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் சிம்பு, மிகவும் குண்டாக காணப்பட்டார். இதனால், சிம்புவின் ரசிகர்கள் என்னடா இது இப்படி ஆகிவிட்டரே இனிமேல், சிம்புக்கு எதிர்காலம் இல்லை என்ற பேச்சும் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டன.

  ஈஸ்வரன் படத்தில் ஸ்லிம்மாக

  ஈஸ்வரன் படத்தில் ஸ்லிம்மாக

  இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈஸ்வரன் திரைப்படத்தில் மிகவும் ஸ்லிம்மாக காணப்பட்ட சிம்பு. பீல்டு அவுட் என விமர்சித்தவர்களுக்கு அமைதியாக பதிலளித்து வருகிறார் சிம்பு. ஈஸ்வரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேசமயம் அடுத்தடுத்த படங்களிலும் ஏற்கனவே நடிக்க இருந்த படங்களையும் தூசி தட்டி நடித்து கொடுத்து முடித்து வருகிறார்.

  மாநாடு எதிர்பார்ப்பில்

  மாநாடு எதிர்பார்ப்பில்

  வெங்கட்பிரபு இயக்கி இருக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா வில்லனாக வருகிறார். அரசியல் கதை களத்தை கொண்ட ஆக்சன் திரைப்படமான மாநாடு திரைப்படத்தில் ஒரு இஸ்லாமிய இளைஞனாக நடிக்கிறார் சிம்பு. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

  47வது படம்

  47வது படம்

  விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்குப் பிறகு சிம்பு கெளதம்மேனன் கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இது சிம்புவின் 47-வது படமாகும். எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

  கிராமத்து கதை

  கிராமத்து கதை

  முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தவாரம் திருச்செந்தூரில் தொடங்கியது. சிம்பு நடிகை ராதிகாவுடன் இருக்கும் புகைப்படமும், இயக்குநர் கெளதம் மேனன் ராதிகா உள்ளிட்ட படக்குழுவினருடன் உணவருந்தும் புகைப்படங்களும் சமுக வலைத்தளங்களில் வைரலாகின.

  சிம்பு சிக்ஸ் பேக்ஸ்

  சிம்பு சிக்ஸ் பேக்ஸ்

  இந்நிலையில் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் குண்டாக இருந்த புகைப்படத்தையும் தற்போது உள்ள புகைப்படத்தையும் இணைந்து பதிவிட்டுள்ளார். அதில் கிட்டத்தட்ட 100 கிலோ இருந்த சிம்பு அப்படியே உடலை பாதியாக குறைந்துள்ளார். சிம்பு சிக்ஸ் பேக் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

  English summary
  actor simbu has lost oodles of weight, and is looking fitter than ever before. He started his journey at 101 kg and the actor now weigh 71 kg, losing 30kg.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X