சிம்புவை லவ் பண்ண சுற்றி வரும் பெண்கள் கூட்டம்...ஆனால் சிம்பு யாரை லவ் பண்றார் தெரியுமா?
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாள் வந்ததுமே ரசிகை ஒருவர் சிம்புவிடம், லவ் பண்ணலாமா வேணாமா என கேட்டார். அதற்கு ஓப்பனாகவும், கூலாகவும் சிம்பு சொன்ன பதில் அனைவரையும் கவர்ந்து விட்டது. அதோடு ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு வெளிப்படையாக சிம்பு சொன்ன பதில் சுவாரஸ்யமாக இருந்து வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் இருந்து கமல் விலகியதை அடுத்து சிம்பு, புதிய ஹோஸ்டாக என்ட்ரி கொடுத்துள்ளார். வந்ததுமே போட்டியாளர்களிடம் பேசிய அவர்களை இனி ஃபன் பண்ண வேண்டும் என கேட்டுக் கொண்டார். போட்டியாளர்களை தனித்தனியாக சந்தித்த சிம்பு, மேடைக்கு வந்ததும் கமலை பற்றி பேசி, தான் எதற்காக இந்த ஷோவிற்கு வந்தேன் என கூறினார்.

அடுத்து நடிக்கும் படங்கள்
மேடைக்கு வந்த சிம்பு, பார்வையாளர்களின் கேள்விகளுக்கு கூலாகவும் ஓப்பனாகவும் பதிலளித்தார். முதலில் கேள்வி கேட்ட ரசிகை, அவரின் வரவிருக்கும் படங்கள் பற்றி கேட்டார். அதற்கு பதிலளித்த சிம்பு, தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். கொரோனா, லாக்டவுன் காரணமாக ஷுட்டிங் தள்ளிப் போனது. இன்னும் ஒரு வாரம் எடுக்கப்பட வேண்டிய ஸ்டன்ட் காட்சிகள் மட்டும் மீதமுள்ளது. அதை முடித்த பிறகு நான் தாடி வளர்க்க வேண்டும். தாடி வளர்ந்ததும் பத்து தல படத்தில் நடிப்பேன். பிறகு கொரோனா குமார் படத்தில் நடிக்க வேண்டும் என்றார்.

எப்படி வெயிட் குறைச்சீங்க
அடுத்த ரசிகர் சிம்புவின் Atman journey வீடியோ பற்றி கேட்டார். முதலில் சிறிது நாட்கள் எடை ஏறி, இறங்கி வந்தது. பிறகு எனக்குள் செய்ய வேண்டிய சில மாற்றங்களை செய்தேன் அதற்கு பிறகு உடல்எடை குறைப்பு ஈஸியாகி விட்டது. இனி உடல் எடையை கூட்டுவதும், குறைப்பதும் அசால்டாக செய்வேன் என்றார். தொட்டி ஜெயா போல் இல்லாமல் பத்து தல வித்தியாசமானதாக இருக்கும் என்றார் சிம்பு.

லவ் பண்ணலாமா சிம்பு
சட்டென எழுந்த ரசிகை ஒருவர், லவ் பண்ணலாமா வேணாமா என பாட்டு பாடியபடியே லவ் பண்ணலாமா வேணாமா என கேட்டார். இதை எதிர்பார்க்காத சிம்பு, நீங்கள் பாட்டு பாடுகிறீர்கள் என நினைத்தேன். லவ் பண்ணலாம் பிரச்சனை இல்லை. ஆனால் நாம் யாரை லவ் பண்ணுகிறோம் என்பது ரொம்ப முக்கியம். ரசிகர்கள் இருக்கும் வரை நான் ரசிகர்களை லவ் பண்ணுவேன் என்றார். அப்படியும் விடாத அந்த ரசிகை, நீங்க இருக்கும் வரை நாங்க உங்களை மட்டும் தான் லவ் பண்ணுவோம் என்றார்.
Recommended Video

ஜொள்ளு விட்ட சுருதி
ரசிகை மட்டுமல்ல போட்டியாளர்களை தனியாக அழைத்து சிம்பு பேசிய போது, அபிராமி, சிம்புவை பார்க்கும் போது வெட்கம் வெட்கமாக வருது என்று குழைந்து பேசினார். அவரை தொடர்ந்து வந்த சுருதியோ, எனக்கு வார்த்தையே வரல. ஏதாவது பேசிகிட்டு இருப்போமே. அதுக்குள்ள போகனுமா என கேட்டு சிம்புவிடம் ஜொள்ளு விட்டார்.


Click it and Unblock the Notifications











