காக்கி சட்டை...கழுத்தில் கர்சிஃப்...அச்சு அசலாய் ஆட்டோ டிரைவராக மாறிய சிம்பு

சென்னை : காக்கிட்டை, கழுத்தில் கர்சிஃப் என பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசலாக ஆட்டோ டிரைவர் போலவே மாறி உள்ள சிம்புவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் செம டிரெண்ட் ஆகி வருகிறது. எதற்காக இந்த மாற்றம் என பலரும் கேட்டு வருகிறார்கள்.

மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் பிஸியாக நடித்து வந்தார் சிம்பு. கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். போட்டியாளர்களிடம் ஃபிரண்ட்லியாகவும், கலகலப்பாகவும் பேசி இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ராயல் லுக்கில் வந்த சிம்பு

ராயல் லுக்கில் வந்த சிம்பு

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதனை தொகுத்து வழங்க ஒயிட் அண்ட் ஒயிட் டிரெசில் செம மாஸாக சிம்பு வந்தார். இதற்காக அவர் நடத்திய போட்டோஷுட் போட்டோக்கள் வெளியாகி செம வைரலாகி வருகின்றன. சிம்புவின் இந்த ஸ்மார்ட், ஹேண்ட்சம் லுக்கிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

ஆட்டோ டிரைவரான சிம்பு

ஆட்டோ டிரைவரான சிம்பு

இதைத் தொடர்ந்து காக்கிச் சட்டையில், கழுத்தில் ஆரஞ்சு நிற கர்சிஃப் உடன் ஆட்டோவில் கெத்தாக அமர்ந்திருக்கும் சிம்புவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நேற்று அப்படி ஒயிட் அண்ட் ஒயிட்டில் ராயல் லுக்கில் வந்த சிம்பு, இன்று திடீரென ஆட்டோ டிரைவர் லுக்கிற்கு மாறி விட்டாரே என பலரும் ஆச்சரியம், குழப்பத்துடன் கேட்டு வந்தனர். முதலில் இது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்பட்டது.

இதற்காக தான் மாற்றமா

இதற்காக தான் மாற்றமா

ஆனால் இது விளம்பர படத்திற்கான ஷுட்டிங் இல்லையாம். சிம்பு தற்போது நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் வீடியோவாம். இதில் தான் ஆட்டோ டிரைவர் கெட்அப்பில் வருகிறார் சிம்பு. வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங் இன்னும் சில நாட்களில் முடிய போகிறதாம். அதற்கு பிறகு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட உள்ளதாம்.

வரிசையாக காத்திருக்கும் படங்கள்

வரிசையாக காத்திருக்கும் படங்கள்

வெந்து தணிந்தது காடு படத்தை முடித்த பிறகு பத்து தல படத்தில் கெளதம் கார்த்திக்குடன் சேர்ந்து நடிக்க போகிறார் சிம்பு. இதைத் தொடர்ந்து டைரக்டர் கோகுல் இயக்கும் காமெடி படமான கொரோனா குமார் படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X