Don't Miss!
- Finance
மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோடு MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!
- News
இரட்டை இலை -அதிமுகவின் எந்த கோஷ்டிக்காவது கிடைக்குமா?முடங்குமா? உச்சநீதிமன்றத்தில் நாளை க்ளைமாக்ஸ்!
- Technology
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அசுரனுக்கு போட்டியாக 15 கிலோ எடை குறைத்து வெறித்தனமாக நடிக்கும் சிம்பு.. தரமான சம்பவம் வெயிட்டிங்!
சென்னை: மாஸ் கம்பேக் கொடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து விஸ்வரூபம் எடுத்து வருகிறார் நடிகர் சிம்பு. அந்த வகையில் இப்போது கைவசம் மாநாடு மற்றும் பத்து தல ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.
Recommended Video
வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் உடல் எடை மொத்தமாக கூடியிருந்த சிம்பு ஈஸ்வரன் படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.
பாக்குறதுக்கு பன்னி மாதிரி இருப்பான்.. மணிரத்னம் எப்படி சம்மதித்தார்? நவரசா சர்ச்சைகள் !
அடுத்தடுத்து கதைகளை கேட்டு நடித்து வரும் சிம்பு இப்பொழுது கௌதம் மேனனுடன் மூன்றாவது முறையாக இணைய உள்ள படத்தின் புதிய டைட்டில் மற்றும் போஸ்டர் நேற்று வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

வெறித்தனமாக
நடிகர் சிம்பு அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி வருகிறார். குறிப்பாக வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் உடல் எடை தாறுமாறாக ஏற்றி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக சிம்பு பின் வெறித்தனமாக உடல் எடையை குறைத்து விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ஈஸ்வரன் திரைப்படத்தில் ஸ்லிம்மான சிம்புவாக மாறி அனைவரது வாய்களையும் அடைத்தார்.எதிர்பார்த்ததைப் போலவே ஈஸ்வரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேசமயம் அடுத்தடுத்த படங்களிலும் ஏற்கனவே நடிக்க இருந்த படங்களையும் தூசி தட்டி நடித்து கொடுத்து முடித்து வருகிறார்.

அரசியல் கதை
இந்த வகையில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த மாநாடு திரைப்படத்தை தூசி தட்டி எடுத்து நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா வில்லனாக வருகிறார். இவ்வாறு எக்கச்சக்கமான சிறப்பம்சங்களை கொண்ட மாநாடு ஒரு அரசியல் கதை களத்தை கொண்ட ஆக்சன் திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

சிம்பு-கௌதம் மேனன் கூட்டணி
அதேசமயம் கன்னட மொழியில் வெளியான மஃப்டி திரைப்படம் தமிழில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் சிம்பு கேங்ஸ்டர் டானாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார். சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி வருகிறார். தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் கூட்டணியாக இருந்த சிம்பு-கௌதம் மேனன் கூட்டணி தற்போது மீண்டும் இணைய உள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த கௌதம் மேனன் சிம்பு கூட்டணி இப்பொழுது மூன்றாவது முறையாக இணைய இருக்க அப்படத்திற்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.இந்த டைட்டில் காக்க காக்க படத்தில் பாடலாசிரியர் தாமரையின் வரிகளில் இடம்பெறும்.

டைட்டில் மாற்றம்
இந்த நிலையில் நேற்று புதிய டைட்டிலை மாற்றம் செய்து ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. அதன்படி சிம்பு கௌதம் மேனன் இணையும் புதிய படத்திற்கு "வெந்து தணிந்தது காடு " என பவர்ஃபுல்லான டைட்டில் வைக்கப்பட்டு மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்பு 15 வயது சிறுவன் போல உள்ளார். காடு முழுவதும் பற்றி எரிய நடுவில் சிம்பு மட்டும் கிழிந்த சட்டையுடன் லுங்கி அணிந்து கொண்டு கையில் கம்பை ஊன்றியபடி பழிக்கு பழி வாங்க வெறித்தனமாக பார்த்துக்கொண்டு உள்ளவாறு இப்படத்தின் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் செம வைரலாகி வருகிறது.

வெந்து தணிந்தது காடு
ஏற்கனவே ஈஸ்வரன் படத்திற்காக உடல் எடையை தாறுமாறாக குறித்திருந்த சிம்பு "வெந்து தணிந்தது காடு" படத்திற்காக மேலும் 15 கிலோ எடையைக் குறைத்து சிறுவயது பையன் போல மாறியுள்ளது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. இதற்கு முந்தைய படங்களான விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா காதல் திரைப்படங்களாக வெளியான நிலையில் இந்த முறை வெந்து தணிந்தது காடு பக்கா ஆக்ஷன் படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு நேற்று திருச்செந்தூரில் தடபுடலாக தொடங்கியது. சென்னை மற்றும் புதுச்சேரியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது.

பொருத்தமாக இருக்கும்
மேலும் நதிகளிலே நீராடும் சூரியன் டைட்டில் ஏன் மாற்றப்பட்டது என்பதற்கான விளக்கமும் தற்போது கிடைத்துள்ளது. அதாவது இந்த திரைப்படம் பார்க்க ஆக்ஷன் கதை களத்தில் உருவாவதால் முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்ற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என வைத்து இருந்தோம். ஆனால் இந்த ஆண்டு பாரதியாரின் 100ஆவது ஆண்டு கொண்டாடப்படுவதால் அவரின் வரிகளில் இருந்து "வெந்து தணிந்தது காடு" என டைட்டில் இதற்கு வைக்கப்பட்டுள்ளது. நதிகளிலே நீராடும் சூரியன் டைட்டிலை விட வெந்து தணிந்தது காடு டைட்டில் இப்படத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது என தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தெரிவித்துள்ளார்.

15 கிலோ குறைத்து
திடீரென உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாரி 15 வயது சிறுவன் போல உள்ள சிம்புவின் கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் அசுரன் படத்திற்கு போட்டியாக இப்படம் உருவாகிறது என பூரித்து பேசி வருகின்றனர். இந்த அளவுக்கு டெடிகேஷனுடன் உடல் எடையை குறைக்க கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக தனியாக உடற்பயிற்சி ஆசிரியர் வைத்து உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுவரை கௌதம் மேனன் இயக்கிய படங்களுக்கு அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி வந்த சூழலில் இந்த முறை சற்று வித்தியாசமாக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை இயக்குகிறார்.

அசுரனுக்குப் போட்டியாக
சென்ற ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அசுரன் திரைப்படம் வெக்கை என்ற நாவலை மையப்படுத்தி உருவானதை தொடர்ந்து இப்போது கௌதம் மேனன் அதே பாணியில் எழுத்தாளர் ஜெயமோகன் கதையை இயக்க இருப்பதால் அசுரனுக்குப் போட்டியாக இப்படம் உருவாகி வருகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். நடிகை ராதிகா சரத்குமார் இதில் சிம்புவுக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார் . இதர நடிகர் நடிகைகளின் விவரங்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.