நீங்க இல்லாம நான் இல்ல...உருக்கமாக புத்தாண்டு வாழ்த்து சொன்ன சிம்பு

சென்னை : என்னை உங்களில் ஒருவனாக பார்த்துக் கொள்ளும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரையுலக சொந்தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நீங்க இல்லாம நான் இல்ல என நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு உருக்கமாக தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களின் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிம்பு அறிக்கை மூலம் மிக உருக்கமாக தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிம்பு அறிக்கை

சிம்பு அறிக்கை

சிம்பு தனது அறிக்கையில், நம்மில் பலர் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம். பலர் வாழ்க்கையின் எல்லையை தொட்டு மீட்டிருப்பர். இழப்பையும், நன்மையையும் கடந்த வருடம் கடந்து வந்திருக்கிறோம்.

வெற்றியை கொடுத்த ஆண்டு

வெற்றியை கொடுத்த ஆண்டு

இறைவனின் பெருங்கருணையால் இந்த புதிய வருடத்தை காணவிருக்கிறோம். தனிப்பட்ட முறையில் மாநாடு படத்தை வெற்றியாக பரிசளித்த ஆண்டு இவ்வாண்டு. மிக பெரிய கொண்டாட்ட மாநிலையுடன் 2021 ஆண்டை முடிக்கிறேன். 2022 ஆண்டும் இதே மகிழ்வுடன் எனக்கும் உங்களுக்கும் அமைய வேண்டிக் கொள்கிறேன்.

நீங்க இல்லாம நான் இல்ல

நீங்க இல்லாம நான் இல்ல

என்னை எப்போதும் உங்களில் ஒருவனாக பார்த்துக் கொள்ளும் என் உயிரினும் மேலாக ரசிகர்களுக்கும், திரையுலக சொந்தங்களுக்கும், என்றென்றும் எனக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடக பெருமக்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நலமே வாழ்க. நீங்க இல்லாம நான் இல்ல என சிம்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு தந்த பெயர்

வெங்கட் பிரபு தந்த பெயர்

இந்த அறிக்கையில் சிம்பு தனது பெயருடன் Atman என்ற பெயரையும் இணைத்து குறிப்பிட்டிருந்தார். சிம்பு தனது பெயருடன் எந்த அடைமொழியையும் சேர்க்க வேண்டாம் என மாநாடு ரிலீசுக்கு முன் படக்குழுவினரிடம் கூறி இருந்தார். ஆனால் டைரக்டர் வெங்கட் பிரபு, மாநாடு படத்தின் வெற்றியையும், சிம்புவின் தற்போது ஆன்மிக மாற்றத்தையும் குறிக்கும் வகையில் Atman என்ற பெயரை சிம்புவிடம் கேட்காமலேயே அவரின் பெயருடன் இணைத்தார்.

தொடர்வாரா சிம்பு

தொடர்வாரா சிம்பு

இதை மாநாடு படம் முடிந்த பிறகும் சிம்பு கடைபிடித்து வருகிறார். அறிக்கையில் குறிப்பிட்டதை போல் இனி வரும் சிம்பு படங்களிலும் அவரது பெயருக்கு பின்னால் Atman என்ற பெயர் இணைக்கப்படுமா என தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X