»   »  ஸ்லிப் ஆன சிம்பு - கையில் காயம்

ஸ்லிப் ஆன சிம்பு - கையில் காயம்

Subscribe to Oneindia Tamil
Simbu with Nila
நடனம் ஆடியபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் நடிகர் சிம்புவின் கையில் லேசான காயம் ஏற்பட்டது.

காளை படத்தில் சிம்பு நடித்து வருகிறார். திமிரு புகழ் தருண் கோபி இப்படத்தை இயக்கி வருகிறார். சிம்புவுக்கு ஜோடியாக நிலா, வேதிகா நடிக்கின்றனர். அஜீத்தின் முன்னாள் நண்பரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்காக, சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கினர். சிம்பு, வேதிகா ஆடிப் பாடும் இந்தப் பாடலை மாஸ்டர் யாசின் வடிவமைத்தார்.

இந்தப் பாடலுக்காக சிம்பு ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார். பின்னர் ஷாட்டுக்குப் போனார்கள். இசைக்கேற்றவாறு ஆடாமல் சற்று வேகமாக ஆட முயன்றார் சிம்பு. அப்போது எதிர்பாராதவிதமாக கால் சறுக்கி, நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார்.

இதில் அவரது கை பிசகியது. மேலும் கட்டை விரலிலும் அடிபட்டது. வலி தாங்க முடியாமல் கைகளை வேகமாக உதறியபடி எழுந்தார் சிம்பு. வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடினார். ஆனால் சிறிது நேரத்தில் கை கட்டை விரல் வீங்க ஆரம்பித்து விட்டது.

இதையடுத்து படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சிம்பு மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பின்னர் விரலில் கட்டு போடப்பட்டது.

இந்தக் காயம் குறித்து சிம்பு கூறுகையில், அது கொஞ்சம் கஷ்டமான மூவ்மென்ட். அதாவது ஜிம்னாஸ்டிக்ஸ் தெரிந்தால்தான் ஆட முடியும். இருந்தாலும் நான் அதை ஆட தீர்மானித்தேன். அப்போதுதான் ஸ்லிப் ஆகி விட்டது. இருந்தாலும் விடாமல், டான்ஸ் மாஸ்டர் திருப்தி அடையும் வகையில் ஆடி விட்டேன்.


இதுவரை இப்படி ஒரு டான்ஸ் மூவ்மென்ட் தமிழ் சினிமாவில் இடம்பெற்றதில்லை. இந்த நடனத்தை மாஸ்டர் யாசின் புதுமையான முறையில் வடிவமைத்துள்ளார்.

பொங்கலுக்கு காளை வந்து விடும். அதற்காக நேரம் காலம் பார்க்காமல் வேகமாக படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றார் சிம்பு.

Please Wait while comments are loading...