»   »  அடுத்தடுத்து செம அடி வாங்கியும் இன்னும் காதலை நம்பும் சிம்பு

அடுத்தடுத்து செம அடி வாங்கியும் இன்னும் காதலை நம்பும் சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் மீதான நம்பிக்கை தனக்கு என்றுமே போகாது என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்புவுக்கும் காதலுக்கும் ஏழாம் பொறுத்தமாகவே உள்ளது. நயன்தாராவை காதலித்தார். ஆனால் அந்த காதல் முறிந்துபோனது. அதன் பிறகு ஹன்சிகாவை காதலித்தார்.

ஹன்சிகாவும் அவர் வாழ்வில் நிலைக்கவில்லை.

காதல்

காதல்

நயன்தாரா, ஹன்சிகா என சிம்பு வாழ்வில் வந்த காதலிகள் பிரிந்து சென்றுவிட்டனர். நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை தற்போது காதலித்து வருகிறார்.

ஹன்சிகா

ஹன்சிகா

சிம்புவை பிரிந்த பிறகு ஹன்சிகா யாரையும் காதலிப்பதாக தகவல்கள் இல்லை. ஆனால் அண்மையில் தான் அவரைப் பற்றிய ஒரு காதல் மேட்டர் தீயாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு

சிம்பு

காதல் என்று வந்தாலே தோல்வியில் முடிகிறதே, இன்னுமா காதல் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளது என சிம்புவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, என்றைக்குமே காதல் மீதான நம்பிக்கை போகாது. நான் காதலில் விழுந்து கொண்டே இருப்பேன் என்றார்.

திருமணம்

திருமணம்

திருமணம் பற்றி எதுவும் திட்டமிடவில்லை. அது என் கையிலும் இல்லை. திருமணம் படம் எடுப்பது போன்று இல்லை. என்னை பிடித்து, வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருக்கும் பெண்ணை முதலில் பார்க்க வேண்டும். அதுவரை நான் காத்திருப்பேன் என சிம்பு தெரிவித்தார்.

English summary
Actor Simbu who has seen only failure in love issue still believes in love. Looks like he is waiting for the right girl to tie the knot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil