»   »  நல்ல கதை அமைந்தால் நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பேன் - சிம்பு

நல்ல கதை அமைந்தால் நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பேன் - சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்ல கதை அமைந்தால் நயன்தாராவுடன் சேர்ந்து மீண்டும் நடிப்பேன் என்று சிம்பு கூறியிருக்கிறார்.

'வல்லவன்' படத்தில் முதன்முறையாக ஜோடி சேர்ந்த சிம்பு-நயன்தாரா இருவரும் படம் முடிவதற்குள் காதலர்களாக மாறினார்கள்.


எதிர்பாராதவிதமாக அந்தக் காதல் முறிந்து போனது. தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பின் இருவரும் இணைந்து நடித்திருக்கும் 'இது நம்ம ஆளு' விரைவில் திரைக்கு வரவுள்ளது.


சிம்பு

சிம்பு

பல்வேறு காரணங்களால் தள்ளிப் போன 'இது நம்ம ஆளு' வருகின்ற 27ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நல்ல படம் அமைந்தால் மீண்டும் நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து சிம்பு ''சண்டையே இல்லாமல் நான் நடித்த முதல் படம் 'இது நம்ம ஆளு'.


நயன்தாரா

நயன்தாரா

பொருத்தமான கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் நானும், நயன்தாராவும் மீண்டும் சேர்ந்து நடிப்போம். இது நம்ம ஆளு படம் தள்ளிப் போனதால் தான் ஒரு பாடலுக்கு நயன்தாராவால் ஆட முடியவில்லை. இதனால் எனக்கும் அவருக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.


இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

'இது நம்ம ஆளு' படம் தாமதமானதற்கு யாரையும் காரணம் என்று சொல்ல முடியாது. பொதுவாக படம் நன்றாக வந்திருக்கிறது. அந்த வகையில் படக்குழுவில் உள்ள அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்.


திருமணம்

திருமணம்

எனக்குத் திருமணம் நடப்பது என்னுடைய கையில் இல்லை. அதனை கடவுள் பார்த்துக் கொள்வார். எப்போது திருமணம் நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அப்போது கண்டிப்பாக நடக்கும்'' என்று கூறியிருக்கிறார்.


இது சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி நடித்திருக்கும் 'இது நம்ம ஆளு' வருகின்ற 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.English summary
Simbu Talks about Idhu Namma Aalu and Nayanthara in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil