»   »  ஏஏஏ டீஸர் மூலம் வம்பை விலைக்கு வாங்கும் சிம்பு?

ஏஏஏ டீஸர் மூலம் வம்பை விலைக்கு வாங்கும் சிம்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட டீஸரில் மாதர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தை குறி வைக்கிறாராம் சிம்பு.

சிம்பு என்றாலே வம்பு என்பதாகிவிட்டது. அந்த அளவுக்கு பாவம் ஏதாவது ஒரு வம்பில் மாட்டிக் கொள்கிறார். பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டு அடங்கியது.


பீப் பாடலால் சிம்புவின் இமேஜ் கண்டபடி டேமேஜ் ஆனது.


வம்பு

வம்பு

சிம்பு மீண்டும் வம்பை தேடிச் செல்கிறாராம். தற்போது எல்லாம் சிம்பு படத்தின் டீஸர் வெளியாகிறது என்றால் அதில் யாரையாவது குறி வைத்து பன்ச் வசனம் இருக்கிறது.


டீஸர்

டீஸர்

சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட டீஸர் வெளியாக உள்ளது. அந்த டீஸரில் அவர் பீப் பாடலுக்காக போர்க்கொடி தூக்கிய மாதர் சங்கங்கள் மற்றும் தன்னை விமர்சித்த நடிகர் சங்கத்தை குறி வைத்து பன்ச் விடுகிறாராம்.


பன்ச் வசனம்

பன்ச் வசனம்

டீஸரில் பீப் பாடலுக்கு பெருசா குரல் கொடுத்தீர்களே ஸ்வாதி கொலை செய்யப்பட்டபோது எங்கம்மா போனீங்க என்பது போன்று பன்ச் வசனம் பேசுகிறாராம் சிம்பு.


ஏஏஏ

ஏஏஏ

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு தந்தை மற்றும் இரட்டையர் மகன்களாக நடிக்கிறார். அப்பா சிம்புவுக்கு ஸ்ரேயா சரண் ஜோடியாக நடிக்கிறார். மகன்களில் ஒருவருக்கு தமன்னா ஜோடி.


English summary
Buzz is that Simbu will target two sangams in his AAA's new teaser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X