»   »  மிரட்டல் விவகாரம்: பணம் வாங்கியதை ஒப்புக் கொண்ட சிவகார்த்திகேயன், ஆனால்...

மிரட்டல் விவகாரம்: பணம் வாங்கியதை ஒப்புக் கொண்ட சிவகார்த்திகேயன், ஆனால்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து மட்டும் புதுப்படத்திற்கு முன்பணம் வாங்கியதாக சிவகார்த்திகேயன் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார் என தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் பொதுச் செயலாளர் பி.எல். தேனப்பன் தெரிவித்துள்ளார்.

தன்னை சிலர் மிரட்டுவதாக கூறி சிவகார்த்திகேயன் ரெமோ சக்சஸ் மீட்டில் அழுதார். புதுப்படத்திற்காக அவருக்கு முன்பணம் கொடுத்ததாக எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், வேந்தர் மூவிஸ் மதன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.

Sivakarthikeyan accepts getting token advance, but...

சிவா முன்பணத்தை வாங்கிவிட்டு தங்களுக்கு படம் பண்ணாமல் இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் பொதுச் செயலாளர் பி.எல். தேனப்பன் பிரபல இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், வேந்தர் மூவிஸ் மதன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகியோர் சிவா மீது புகார் அளித்துள்ளனர். அதில் ஞானவேல்ராஜாவிடம் மட்டும் ஒப்பந்த நகல் உள்ளது. மற்ற இருவரும் பணம் கொடுத்துவிட்டு 2 ஆண்டுகளாக காத்திருப்பதாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து மட்டும் புதுப்படத்திற்கு முன்பணம் வாங்கியதாக சிவகார்த்திகேயன் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து பேசப்படும் என டி. சிவா தெரிவித்துள்ளார் என்றார்.

English summary
Tamil Nadu Film Producers Council general secretary PL Thenappan said that Sivakarthikeyan got advance amount from Studio Green Gnanavelraja and not from Madhans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil