"அந்த மனசு தான் சார் கடவுள்” சிங்கம் மற்றும் யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்; குவியுது பாராட்டு!
சென்னை: ஏற்கனவே 'அனு' என்கிற பெண் புலியை தத்தெடுத்து பராமரித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது புதிதாக சிங்கம் மற்றும் யானையை தத்தெடுத்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக மாறியுள்ளார்.
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் டான் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

டாக்டருக்கு வெயிட்டிங்
நோயாளிகள் மருத்துவமனையில் டாக்டருக்கு காத்திருப்பது போல சிவகார்த்திகேயன் ரசிகர்கள் டாக்டர் படத்தின் ரிலீசுக்கு காத்திருக்கின்றனர். மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், படங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு டாக்டரை ரிலீஸ் செய்ய படக்குழு தீர்மானித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அயலானும் இருக்கு
இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் ஏலியன் திரைப்படமாக உருவாகி உள்ள அயலான் படமும் படப்பிடிப்பு முடிந்த நிலையில் எப்போ வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

டானில் பிசி
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் டான் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் படு பிசியாக நடித்து வருகிறார். அடுத்ததாக தெலுங்கு பட இயக்குநர் படத்திலும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குக் வித் கோமாளி பிரபலங்களான புகழ், ஷிவாங்கி உள்ளிட்ட பலர் டான் படத்தில் நடித்து வருகின்றனர்.

சிங்கம் மற்றும் யானை
வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் மற்றும் யானையை நடிகர் சிவகார்த்திகேயன் 6 மாத காலத்திற்கு தத்தெடுத்து இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சினிமாவை தாண்டி சமூக சேவை செய்யும் நல்ல மனசும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அதிகளவில் உள்ளது.

சிங்கம் ‘விஷ்ணு'
கொரோனா பரவலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல கேளிக்கை பூங்காக்கள் மூடப்பட்டிருந்தது. சமீபத்தில் கொரோனா தளர்வுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், உயிரியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து கேளிக்கை பூங்காக்களும் திறக்கப்பட்டன. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் விஷ்ணு எனும் ஆண் சிங்கத்தை தத்தெடுத்துள்ளார்.

யானை 'பிராக்கிரிதி'
அதே போல பெண் யானை பிராக்கிரிதியை நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த 6 மாத காலத்திற்கு தத்தெடுத்து உள்ளார் என்கிற அறிவிப்பை அண்ணா உயிரியல் பூங்கா சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் உயிரினங்களை பராமரிக்க இப்படி பணம் படைத்த பிரபலங்கள் முன் வந்தால் வனவிலங்குகளை பாதுகாக்க முடிகிறதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை புலி
ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளாக 'அனு' எனும் வெள்ளை புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்து அதன் பராமரிப்புக்கு ஆகும் தொகையினை செலுத்தி வந்தார். இந்நிலையில், தற்போது சிங்கம் 'விஷ்ணு' மற்றும் யானை 'பிராக்கிரிதி'யை தத்தெடுத்து பராமரிக்க முன் வந்துள்ளார்.

அந்த மனசு தான் சார் கடவுள்
மீண்டும் வனவிலங்குகளை தத்தெடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் பராமரிக்கும் அறிவிப்பு வெளியான நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் "அந்த மனசு தான் சார் கடவுள்" என நடிகர் சிவகார்த்திகேயனை கொண்டாடி வருகின்றனர். அப்படியே டாக்டர் படம் எப்போ ரிலீஸ்னு ஒரு அப்டேட்டும் வந்தா நல்லா இருக்கும் என சைடு கேப்பில் கோரிக்கைகளையும் முன் வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











