twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    4 ஆண்டுகளில் 8 ஹிட் படங்கள்.. வருத்தப்படாத நாயகனின் வெற்றிப்பயணமிது!

    By Manjula
    |

    சென்னை: நடிக்க வந்து வெற்றிகரமாக 4 ஆண்டுகள் கடந்து விட்டன. இதற்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.

    சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் குழந்தைகளை வைத்து பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

    தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான அனைத்துப் படங்களுமே ஹிட்டடிக்க இன்று தமிழ் சினிமாவில் விஜய், அஜீத்திற்கு அடுத்ததாக பாக்ஸ் ஆபீஸில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்.

    சிவகார்த்திகேயன்

    சிவகார்த்திகேயன்

    சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் சரியாக 4 ஆண்டுகளுக்கு முன் 2012 ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷுடன் இணைந்து சிவகார்த்தி காமெடி பண்ணிய 3 படம் வெளியானது. சிறிய வேடம் தான் என்றாலும் கிடைத்த வாய்ப்பிலும் ஸ்கோர் செய்திருந்தார்.

    மனம் கொத்திப் பறவை

    மனம் கொத்திப் பறவை

    எழில் இயக்கத்தில் சிவகர்த்திகேயன் நாயகனாக நடித்த மனம் கொத்திப் பறவையை காமெடி காப்பாற்ற மெரினா வரிசையில் மனம் கொத்திப் பறவையும் ஹிட் வரிசையில் இணைந்தது.

    பட்டை முருகன்

    பட்டை முருகன்

    அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் இயக்கத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் பட்டை முருகனாக விமல், சூரி ஆகியோருடன் இணைந்து நடித்தார். 2013 ம் ஆண்டில் வெளியான இப்படமும் ஹிட் பட்டியலில் சேர்ந்து கொண்டது.

    எதிர்நீச்சல்

    எதிர்நீச்சல்

    தனுஷ் தயாரிப்பில் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் இவர் சோலோ ஹீரோவாக நடித்த எதிர்நீச்சல் படம் ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. அதே ஆண்டில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பி சிவகார்த்தியை சந்தோஷ கார்த்தியாக மாற்றியது.

    காக்கி சட்டை

    காக்கி சட்டை

    தொடர்ந்து 2014 ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை, மான் கராத்தே போன்ற படங்களும் முதலுக்கு மோசமில்லை என்ற ரீதியில் தப்பித்துக் கொண்டது. இதனால் சிவகார்த்திகேயன் படங்களுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    ரஜினிமுருகன்

    ரஜினிமுருகன்

    தள்ளிப் போன படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றதில்லை என்ற கூற்றை சிவாவின் ரஜினிமுருகன் படம் பொய்யாக்கி விட்டது. பலமுறை தள்ளிப்போன இப்படம் இந்த பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

    பாலா,விஷால்

    பாலா,விஷால்

    பாலா மற்றும் விஷால் படங்களுடன் வெளியான ரஜினிமுருகன் 2016 ம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றியால் அஜீத்,விஜய்க்கு அடுத்து பாக்ஸ் ஆபீஸில் ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

    3 படங்கள்

    3 படங்கள்

    ரஜினிமுருகன் படத்திற்குப் பின்னர் இவரின் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதனைத் தக்க வைக்கும் விதமாக ரவிக்குமார்(இன்று நேற்று நாளை), மோகன்ராஜா ஆகியோரின் அடுத்த படங்களை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் சொந்த தயாரிப்பில் முன்னணி தொழில் நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

    அனைவருக்கும் நன்றி

    சினிமாவிற்கு வந்து நேற்றுடன் 4 வருடங்கள் முடிவுற்ற நிலையில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், சக நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

    திரைப்பிரபலங்கள்

    சிவகார்த்திகேயனின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு சித்தார்த், மோகன் ராஜா, குஷ்பு, திவ்யதர்ஷினி, ஹன்சிகா, வரலட்சுமி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருக்கின்றனர்.

    இதனால் மேலும் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் இந்த 'வருத்தப்படாத வாலிபர்'.

    English summary
    Sivakarthikeyan Says Thanks. He Wrote on Twitter "Completed 4 years in cinema Thanks 2 My Directors,Producers,Co Stars,Technicians,Distributors,Exhibitors,Press & Media 4 ur big support".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X