»   »  சிவகார்த்திகேயன் அழ மதன்கள் இல்லை ராஜா காரணமாம்: அவர் தான்பா சொல்றாரு!

சிவகார்த்திகேயன் அழ மதன்கள் இல்லை ராஜா காரணமாம்: அவர் தான்பா சொல்றாரு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கு வாழ்க்கையில் பிரச்சனை இருக்கிறது என்பதற்காக நான் மேடையில் கண்கலங்கவில்லை. ராஜா தனது குடும்பத்தை பார்க்காமல் 24 மணிநேரமும் உழைத்ததை நினைத்து நெகிழ்ச்சியில் அழுதேன் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாண்டே சிவகார்த்திகேயனிடம் பல கேள்விகள் கேட்டார்.

அப்போது சிவகார்த்திகேயன் கூறுகையில்,

அழுகை

அழுகை

நான் பொது மேடையில் இதுவரை இரண்டு முறை அழுதுள்ளேன். முதல் முறை விருது வாங்கும் போது என் அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணியதால் அழுதேன். இன்னமும் வீட்டில் ஒரு நல்ல விஷயம் நடக்கும்போது அப்பாவை நினைத்து அழுவேன்.

ரெமோ

ரெமோ

இரண்டாவது முறையாக ரெமோ சக்சஸ் மீட்டில் அழுதேன். எனக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சனை உள்ளது, எதுவும் செய்ய முடியவில்லை என பலர் நினைத்துள்ளனர்.

ராஜா

ராஜா

நான் ரெமோ விழாவில் அழுததற்கு காரணம் இமோஷனலாகிவிட்டேன். இமோஷனை கட்டுப்படுத்தியிருக்கலாமோ என தற்போது நினைக்கிறேன். எனக்கு ராஜா தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி நெருக்கமானவர். அவரை நினைக்கும்போது என்னையும் அறியாமல் வந்த கண்ணீர் தான்.

அழ மாட்டேன்

அழ மாட்டேன்

ராஜா என் அருகே வந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக அழுதிருப்பேன். இனி நான் அழ மாட்டேன் என நினைக்கிறேன். என் உணர்வுகள் முக்கால்வாசி பேருக்கு சரியாகப் போய் சேர்கிறது. என்னை போன்று அனைத்து துறைகளிலும் கஷ்டப்படுகிறவர்களுக்கு இந்த வலி புரியும்.

இல்லை

இல்லை

எனக்கு வாழ்க்கையில் பிரச்சனை இருக்கிறது என்பதற்காக நான் மேடையில் கண்கலங்கவில்லை. ராஜா தனது குடும்பத்தை பார்க்காமல் 24 மணிநேரமும் உழைத்ததை நினைத்து நெகிழ்ச்சியில் அழுதேன்.

தேவையில்லை

தேவையில்லை

மேடையில் நான் அழுதிருக்கத் தேவையில்லை. நான் தனியாக வந்து ராஜா அண்ணனை கட்டிப்பிடித்து அழுதிருக்கலாம். இனி என் இமோஷன்களை யாரிடம் காண்பிக்க வேண்டுமோ அவர்களிடம் மட்டும் காண்பிப்பேன்.

English summary
Sivakarthikeyan said he cried at Remo success meet thinking about movie's producer Raja's hard work and not his problems.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil