»   »  ரஜினியைத் தொடர்ந்து ஜப்பானில் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த அங்கீகாரம்

ரஜினியைத் தொடர்ந்து ஜப்பானில் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த அங்கீகாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்டத் தயாராக உள்ளார்கள் இந்த முத்தரப்பினரும். அந்த தைரியம்தான் இதுநாள்வரை சிவகார்த்திகேயன் நடித்தராத அளவுக்கு தற்போது அவர் நடித்துள்ள ரெமோ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க 24 ஏஎம் தயாரிப்பு நிறுவனத்தைத் தூண்டியுள்ளது..

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் 'ரஜினி முருகன்' சிவகார்த்திகேயனின் ராசி ஜோடியான கீர்த்தி சுரேஷ் மீண்டும் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் சதீஷ், யோகிபாபு, சரண்யா, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

Sivakarthikeyan movie for first time in Japan!

வரும் அக்டோபர் 7 ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தை ஜப்பானில் வெளியிடும் உரிமையை 'மெட்ராஸ் மூவிஸ்' எனும் நிறுவனம் பெற்றுள்ளது.

ரஜினி படங்கள் என்றால் ஜப்பானில் பல ஏரியாக்களில் வெளியாகும். அஜீத், விஜய் உள்ளிட்ட மற்ற எந்த நடிகர் படமாக இருந்தாலும் அவை ஜப்பானில் உள்ள யொகோயமா (Yokoyama) மற்றும் டோக்கியோ (Tokyo) ஆகிய இரண்டே ஏரியாக்களில் மட்டுமே வெளியிடுவார்கள். அதுவும் ஓரிரு நாட்களுக்குத்தான்.

ஆனால் முதன் முறையாக, மேற்கண்ட இரு நகரங்களில் மட்டுமல்ல, நகோயா (Nagoya) எனும் மூன்றாவது ஏரியாவில் சிவகார்த்திகேயன் படம் ரெமோ வெளியாகிறது. ரஜினிக்கு அடுத்து இந்த கவுரவம் சிவகார்த்திகேயனுக்குத்தான் கிடைத்திருக்கிறது.

English summary
Sivakarthikeyan is high wave now. The 7 films old young actor is now become the 2nd hero after Superstar Rajinikanth in releasing a movie in Japanese city Nagoyachaya. Its none other than Remo. Yes this Sivakarthikeyan movie will be screened on October 9th in Aeon Nagoyachaya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil