இதுக்கு மட்டும் தான் நான் அடிக்ட்...சிவகார்த்திகேயன் சொன்ன சீக்ரெட்

சென்னை : தான் எதற்கு அடிக்ட், எந்த ஒரு பொருளை தந்தால் தன்னிடம் இருந்து எல்லா விஷயத்தையும் வாங்கி விடலாம் என நடிகர் சிவகார்த்திகேயனே பேட்டி ஒன்றில் ஓப்பனாக சொல்லி உள்ளார்.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த டான் படம் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதே சமயம் ரசிகர்களின் ஆதரவு நன்றாக உள்ளது.

மீண்டும் ஸ்கூல் பையன் ரோல்

மீண்டும் ஸ்கூல் பையன் ரோல்

இந்நிலையில் சிவகார்த்திகேயன் டான் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக தயாரிப்பாளர் மற்றும் படத்தின் ஹீரோ என்ற முறையில் பல மீடியாக்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார். இதில் டிவி சேனல் ஒன்றிற்கு டான் படம் பற்றி பேட்டி அளித்த சிவகார்த்திகேயன், 3 படத்திற்கு பிறகு இந்த படத்திலும் 10 நிமிடங்கள் கொண்ட ஸ்கூல் பையன் போர்ஷன் உள்ளது. இதிலும் ப்ளஸ் 2 படிக்கும் பையன் ரோலில் நடித்திருக்கிறேன்.

இதெல்லாம் சாப்பிட மாட்டேன்

இதெல்லாம் சாப்பிட மாட்டேன்

நான் ஃபிட்னசில் கவனம் செலுத்தி, தினமும் நேரம் ஒதுக்கி, ஒர்க்அவுட் செய்யும் ஆள் கிடையாது. அதே சமயம் சாப்பாட்டில் மிக கவனமாக இருப்பேன். எண்ணெய் பதார்த்தங்கள், ஜங்க் ஃபுட், கூல் ட்ரிங்ஸ் நானும் குடிக்க மாட்டேன். என் குழந்தைக்கும் கொடுக்க மாட்டேன். சமீபத்தில் ஒரு நியூஸ் பார்த்தேன். அதில் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் இது தான் என கூறினார்கள். அதனால் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என நினைப்பேன்.

இதுக்கு மட்டும் தான் அடிக்ட்

இதுக்கு மட்டும் தான் அடிக்ட்

எனக்கு ஸ்வீட் என்றால் மிகவும் பிடிக்கும். ஸ்வீட் மட்டும் கொடுத்து விட்டு நீங்கள் என்ன கேட்டாலும் எதையும் யோசிக்காமல் நான் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே இருப்பேன். அந்த அளவிற்கு அடிக்ட். வேறு எந்த விஷயத்திலும் நான் அடிக்ட் கிடையாது. ஸ்வீட்டிற்கு மட்டும் அடிக்ட். ஆனால் டான் படத்தில் இந்த ரோலுக்காக அதற்கும் நோ சொல்ல துவங்கி விட்டேன் என்றார்.

இவருக்கு இப்படி ஒரு பழக்கமா

இவருக்கு இப்படி ஒரு பழக்கமா

இதை கேட்ட பலரும், சிவகார்த்திகேயனுக்கு இப்படி பழக்கம் இருக்கா என ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள். தன்னை பற்றிய சீக்ரெட்களை இவ்வளவு ஓப்பனாக பேட்டியில் சொல்கிறாரே என்றும் சிலர் கூறி வருகின்றனர். அதே சமயம் தனது படங்களுக்காக சிவகார்த்திகேயன் எடுத்து வரும் மெனக்கெடல்கள் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X