வடிவேலுவுக்கு நாய் சேகர் டைட்டில் கிடைக்காதது ஏன்... உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்
சென்னை : கோலிவுட்டின் திறமையான நடிகர், பிஸியான நடிகர் என பெயர் எடுத்தவர் சிவகார்த்திகேயன். நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளைக் கொண்டு, பலரின் மனம் கவர்ந்த நடிகராகவும் இருந்து வருகிறார்.
Recommended Video
சிவகார்த்திகேயன் கடைசியாக 2019 ல் ஹீரோ படத்தில் நடித்தார். கொரோனா, லாக்டவுன் காரணமாக அவர் நடத்த படங்கள் ஏதும் வெளிவராமல் உள்ளன. சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் வரிசையாக ரிலீசுக்காக காத்திருக்கின்றன.

பிஸியான சிவகார்த்திகேயன்
டாக்டர், அயலான் படங்களில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகும் சில படங்களில் நடிக்கவும் சிவகார்த்திகேயனிடம் பேசப்பட்டு வருகிறது.

ஹீரோ ஆகும் சதீஷ்
சமீபத்தில் பிரஸ் மீட் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயனிடம் அவரது நண்பர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் நாய் சேகர் படம் பற்றி கேட்கப்பட்டது. சதீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ரலட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார்.

நண்பன் ஹீரோவானதில் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயன் பேசுகையில், என் ஃபிரண்ட் ஹீரோவாக நடிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவருக்கும் மகிழ்ச்சி என்றார். இதே டைட்டில் வடிவேலுவிற்கு கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம் எனவும் சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது.

வடிவேலுக்கு கிடைக்காதது ஏன்
அதற்கு பதிலளித்த அவர், சதீஷ் நடிக்கும் நாய் சேகர் படத்தின் தயாரிப்பாளர்கள் அதே டைட்டில் அடிப்படையில் படத்தை எடுத்து முடித்து விட்டனர். இது பற்றி வடிவேலுவிடம் தனிப்பட்ட முறையில் பேசிய போது அவரும் இதற்கும் ஒப்புக் கொண்டார். அது மட்டுமல்ல சதீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் என்பதால் அனைவரையும் கவரும் விதமாக டைட்டில் அவசியமானது. அது அவருக்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்றுத் தரும்.

சிவகார்த்திகேயன் தந்த விளக்கம்
ஆனால் வடிவேலு மீண்டும் சினிமாவிற்கு திரும்பும் படத்திற்கு டைட்டில் முக்கியமே இல்லை. எந்த டைட்டிலில் அவர் நடித்தாலும் அந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும். அவருக்கு ஏற்கனவே லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் மிகப் பெரிய நடிகர் என்றார். நாய் சேகர் டைட்டில் பற்றி சிவகார்த்திகேயன் பேசிய இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.

மாற்றப்பட்ட டைட்டில்
சதீஷ் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்திற்கு நாய் சேகர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதால், வடிவேலு மீண்டும் நடிக்க வரும் படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என டைட்டில் வைத்துள்ளனர். இருந்தும் இந்த டைட்டில் சில சர்ச்சைகளையும் எழுப்பியது. மாநகரம் படத்தில் வடிவேலு நடித்த கேரக்டர் பெயரான நாய் சேகர் என்பதை, வடிவேலு மீண்டும் நடிக்க வரும் படத்திற்கு டைட்டிலாக வைக்க முதலில் பேசப்பட்டது. ஆனால் சதீஷ் படத்திற்கு அந்த டைட்டில் வைக்கப்பட்டதால், வடிவேலு படத்தின் டைட்டில் சற்று மாற்றப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











