»   »  நடிகர்களுக்காக சமூக வலைத் தளங்களில் சண்டை போடாதீங்கப்பா! - சிவகார்த்திகேயன் அட்வைஸ்

நடிகர்களுக்காக சமூக வலைத் தளங்களில் சண்டை போடாதீங்கப்பா! - சிவகார்த்திகேயன் அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அவரவருக்குப் பிடித்த நடிகர்களுக்காக சமூக வலைத் தளங்களில் சண்டை போட்டுக் கொண்டிருக்காமல், உருப்படியாக ஏதாவது செய்யலாம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார்.

சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டுள்ளது.


ரசிகர்கள் மோதல்

ரசிகர்கள் மோதல்

இந்தப் படம் வந்த நாளிலிருந்து சிவகார்த்திகேயன்தான் இனி இளையதளபதி என்றெல்லாம் சிலர் சமூக வலைத் தளங்களில் எழுத, விஜய்யின் ரசிகர்கள் பொங்கிவிட்டனர். இது இரு தரப்பு ரசிகர்களுக்கும் சமூக வலைத் தளங்களில் மோதலை ஏற்படுத்திவிட்டது.


சிவகார்த்திகேயன் அட்வைஸ்

சிவகார்த்திகேயன் அட்வைஸ்

இதைக் கவனித்த சிவகார்த்திகேயன், ரசிகர்கள் எதற்காக இப்படி அடித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார்.


யார் இடத்தை யாரும் பிடிக்க முடியாது

யார் இடத்தை யாரும் பிடிக்க முடியாது

அவர் கூறுகையில், "என்னை அடுத்த விஜய் என்று பேசி வருகிறார்கள். யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்கமுடியாது. அது அவர்களுக்கான இடம்.


தவறாக

தவறாக

சமூக வலைதளங்களின் சக்தி தெரியாமல் சிலர் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். தனக்கு பிடித்த நடிகருக்காக சண்டை போடுவதற்கு சமூக வலைதளங்கள் உருவாக்கப்படவில்லை.


மக்களுக்கு நல்லது பண்ணுங்க

மக்களுக்கு நல்லது பண்ணுங்க

மக்களுக்கு உருப்படியாக தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய பயன்படுத்தப்பட வேண்டிய சமூக வலைதளங்கள் இந்த மாதிரி பயன்படுத்தப்படுவதற்கு நாம் அனைவரும் வருத்தப்பட வேண்டும். சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்குபவர்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டால் அது பலருக்கு நன்மையை அளிக்கும்," என்றார்.


English summary
Sivakarthikeyan advised fans not to fight with other actor fans in social network websites.
Please Wait while comments are loading...