ஜலபுலஜங்கு...குத்தாட்டம் போட வைக்கும் டான் ஃபஸ்ட் சிங்கிள்
சென்னை : சிவகார்த்திகேயனின் செம குத்தாட்டம் போட வைக்கும் டான் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாஸ் ஹிட் ரெடி என வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஆக்ஷன் காமெடி படமான டான் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

ஃபஸ்ட் சிங்கிள்
டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயனும், பிரியங்கா அருள் மோகனும் மீண்டும் இணைந்துள்ள இந்த டான் படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடல் பட்டையை கிளப்பி வருகிறது.

பட்டையை கிளப்பிய ஜலபுலஜங்கு
ஃபஸ்ட் சிங்கிள் லிரிகல் பாடலாக வெளியிடப்பட்டுள்ளது. ஜலபுலஜங்கு என துவங்கும் இந்த பாடல் செம கலர்ஃபுல் வைப்ஸ் உடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே சோஷியல் மீடியாக்களில் டிரெண்ட் ஆக துவங்கி விட்டது.

டிரெண்டிங்கில் டான்
#Sivakarthikeyan, #Don, #Jalabulajangu போன்ற ஹாஷ்டேக்குகள் செம வைரலாகி வருகின்றன. பட்டையை கிளப்பும் இந்த பாடலை ஏராளமானோர் பாராட்டி, ரீவிட் செய்துள்ளனர். மீண்டும் சிவகார்த்திகேயன், அனிருத் கூட்டணியில் உருவாகி உள்ள பாடல் மாஸ் ஹிட் ஆகும் என அனைவரும் கூறி வருகின்றனர்.

ஆட வைத்த சிவகார்த்திகேயன்
ராகேஷ் எழுதிய ஜலபுலஜங்கு பாடலை அனிருத் பாடி உள்ளார். இந்தி, தமிழ் மொழிகளில் லோக்கல் வார்த்தைகளை பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்த பாடலில் சிவகார்த்திகேயன் நடனத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த பாடலில் மேக்கிங் க்ளிப்சும் இணைக்கப்பட்டுள்ளது, கூடுதல் ஸ்பெஷலாக அமைந்துள்ளது.

இன்ட்ரோ பாடலா
இது டான் படத்தின் சிவகார்த்திகேயனுக்கான இன்ட்ரோ பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ள இந்த பாடல் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் மற்றும் லைக்குகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











