»   »  பார்கோட் கிரிமினல்கள் பற்றிய கதையா மோகன் ராஜா சிவகார்த்திகேயன் இணையும் படம்?

பார்கோட் கிரிமினல்கள் பற்றிய கதையா மோகன் ராஜா சிவகார்த்திகேயன் இணையும் படம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

படப்பிடிப்பு தொடங்கும்போதே ரிலீஸ் தேதியை அறிவித்து பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்கள் சிவகார்த்திகேயன் படக்குழுவினர். மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தை தயாரிக்கவிருப்பது ஆர்டி.ராஜாதான். நயன்தாரா ஹீரோயின். இவர்கள் தவிர ஃபகத் பாசில், சிநேகா, பிரகாஷ்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கிறது.

Sivakarthikeyan's next on bar code crimes?

சிவகார்த்திகேயன், நயன் தாரா இருவரும் மெடிக்கல் ரெப்ரேசண்டேட்டிவாக நடிக்கிறார்கள் என்று சொல்லப்பட்ட இந்த கதையை பற்றி ஒரு க்ளூ கொடுத்திருக்கிறார்கள். அது பார்கோட். உலக அளவில் பொருட்களின் தரத்தை காட்ட பயன்படுத்தப்படும் பார்கோட் டெக்னாலஜியிலும் கிரிமினல்கள் ஏற்கெனவே புகுந்துவிட்டனர். போலி பார்கோட்களை உருவாக்கி கம்யூட்டர் ஸ்கேனர்களே நம்பும் வகையில் போலி பொருட்கள் தயாரிக்கின்றனர். அப்படி போலி பார்கோட்களை உருவாக்கும் கிரிமினல்கள் பற்றிய கதை தான் என்கிறார்கள்.

போலி மருந்துகளையும் கதைக்குள்ளே சேர்த்திருக்கிறார் மோகன்ராஜா என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

English summary
Sources say that the forthcoming Sivakarthikeyan - Mohan Raja movie is with the background of global bar code crimes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos