»   »  நவம்பர் 11-ல் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்... தடை வருமா?

நவம்பர் 11-ல் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்... தடை வருமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரெமோ நன்றி அறிவிப்பு விழாவில் பேசும்போது, தனது படங்களை வர விடாமல் தடுக்கப் பார்க்கிறார்கள் என்று சிவகார்த்திகேயன் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியதுடன், நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்துள்ளார்.

இந்த சூழலில் சிவகார்த்திகேயனின் புதிய படம் வரும் நவம்பர் 11-ம் தேதி ஆரம்பமாகும் என அறிவித்துள்ளார் ரெமோ தயாரிப்பாளர் ஆர்டி ராஜா.

Sivakarthikeyan's next project to start on Nov 11th

இந்தப் படத்தை இயக்குபவர் மோகன் ராஜா. தனி ஒருவன் படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம் இது.

சிவகார்த்திகேயனுடன் முதன் முறையாக இணைகிறார் மோகன் ராஜா. இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சிவகார்த்திகேயன், பி.சி.ஸ்ரீராம் கூட்டணியில் உருவான ரெமோ படத்தைத் தயாரித்த 24ஏம் ஸ்டூடியோஸ்தான் நிறுவனம் இப்படத்தையும் தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு நவம்பர் 11 முதல் ஆரம்பமாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் என முக்கிய நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

தங்களுக்கு தேதி கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், அந்தப் படங்களை முடிக்காமல் வேறு படங்களில் நடிக்கக் கூடாது, இல்லாவிட்டால் பெப்சி மூலம் ரெட் போடுவோம் என இரு பிரபல தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்தப் புதுப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Sivakarthikeyan's next movie after Remo has been announced today. The Shooting of the movie will be begins on Nov 11th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil