»   »  இன்று நேற்று நாளை இயக்குநருடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்!

இன்று நேற்று நாளை இயக்குநருடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகார்த்திகேயன் அடுத்த படம் யாருக்கு? இந்த பஞ்சாயத்து இன்னும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் தனது அடுத்த படம் இன்னாருக்குதான் என்பதை முடிவு செய்துவிட்டார்.

அந்த இன்னார் ஆர் ரவிக்குமார்... இன்று நேற்று நாளை படத்தைத் தந்த இயக்குநர்.

Sivakarthikeyan's next with R Ravikumar

ரெமோ படத்துக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக உயர்த்தி பொன்ராம் இயக்கும் புதுப்படத்தில் நடிக்கிறார்.

அதற்கு அடுத்த படம் ரவிக்குமாருடன்தான்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், "அது ஒரு கனவுப்படம். பெரிய பட்ஜெட்டில் பண்ணவேண்டியது. எனவே படப்பிடிப்பு ஆரம்பமாகவே சில நாள்கள் தேவைப்படும். இதில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்," என்றார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் ஆர். ரவிகுமார் கூறும்போது, நான் ஏற்கெனவே இரு படங்களை இயக்க ஒப்புக்கொண்டுள்ளேன். அந்தப் படங்கள் முடிந்தபிறகுதான் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குவேன்," என்றார்.

English summary
Sivakarthikeyan has signed a movie with Indru Netru Naalai director R Ravikumar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil