சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் அந்த நடிகை?.. அட கெமிஸ்ட்ரி சூப்பரா இருக்குமே பாஸ்

சென்னை: அமரன் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இப்படமானது அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இப்படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் ஹீரோயின் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.

மாவீரன், அயலான், அமரன், மதராஸி என வரிசையாக வெற்றியை கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதிலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலித்து மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உயிரிழந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு உருவான படதை கமல்ஹாசன் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதா கொங்கராவின் பராசக்தி: அமரன் வெற்றிக்கு பிறகு வெளியான மதராஸியும் ஹிட்தான். இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார் எஸ்கே. இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. முதலில் இக்கதையில் சூர்யாதான் நடிப்பதாக இருந்தார். ஆனால் அவருக்கும், சுதாவுக்கும் ஏதோ முட்டல் உருவானதால் அவர் வெளியேற எஸ்கே உள்ளே வந்தார். இது ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு மாணவர்கள் செய்த போராட்டம் பற்றிய கதையாக உருவாகியிருக்கிறது.

Sivakarthikeyan s Next with Venkat Prabhu Kalyani Priyadarshan Confirmed as Heroine After Amaran Success

அடுத்த வருடம் ரிலீஸ்: படமானது அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருக்கிறது. அநேகமாக விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக வந்தாலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரிசையாக மூன்று படங்களை ஹிட் கொடுத்து கோலிவுட்டில் வலுவான இடத்தை பிடித்திருக்கும் எஸ்கே; இந்தப் படத்தையும் வெற்றி படமாக கொடுத்து அடுத்தக்கட்டத்துக்கு செல்வார் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

வெங்கட் பிரபுவுடன் படம்: இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே நடிக்க கமிட்டாகியிருந்தார். அமரன் படத்துக்கு முன்னதாகவே இந்தப் படத்தில் அவர் நடித்திருக்க வேண்டியது. ஆனால் அந்த சமயத்தில் விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கும் சந்தர்ப்பம் வெங்கட் பிரபுவுக்கு அமைந்ததன் காரணமாக இந்தப் படம் தள்ளிப்போனது. இப்போது இரண்டு பேரும் இணையும் நேரம் கூடி வந்திருப்பதால் படத்தின் வேலைகளை ஸ்டார்ட் செய்ய தயாராகிவிட்டார் இயக்குநர்.

யார் ஹீரோயின்?: இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவிருப்பதாகவும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. ஏற்கனவே அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசியாக அவர் நடித்திருந்த லோகா படம் 100 கோடி ரூபாய் வசுலித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X