»   »  'ரஜினி முருகன் வரும்போது வரட்டும்'... புதுப்படத்தைத் தொடங்கினார் சிவகார்த்திகேயன்!

'ரஜினி முருகன் வரும்போது வரட்டும்'... புதுப்படத்தைத் தொடங்கினார் சிவகார்த்திகேயன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி முருகன் படத்தை எப்போதோ முடித்துக் கொடுத்துவிட்டார் சிவகார்த்திகேயன். ஆனால் தயாரிப்பாளர் லிங்குசாமியின் பைனான்ஸ் பிரச்சினைகள் கன்னித்தீவு சிந்துபாத் ரேஞ்சுக்கு தொடர்வதால், படம் வெளியாகும் வழியே தெரியவில்லை.

பொறுத்துப் பார்த்த சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார்.

Sivakarthikeyan starts new movie shooting

இந்தப் படத்தை அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் இன்ஜினியராக ரசூல் பூக்குட்டி, இசையமைப்பாளராக அனிருத், ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் என பெரிய கூட்டணியுடன் களமிறங்குகிறார்.

ரஜினி முருகனைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். அதே வேகத்தில் வருகிற கோடை விடுமுறையில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

English summary
Sivakarthikeyan and his new team is starting their work for their new movie shooting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil