»   »  பெண் குரலில் டப்பிங்... தீவிர பயிற்சியில் சிவகார்த்திகேயன்!

பெண் குரலில் டப்பிங்... தீவிர பயிற்சியில் சிவகார்த்திகேயன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகார்த்திகேயனின் சொந்தப் படம் என்று கூறப்படும் ரெமோவின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப ஸ்பெஷல். ஒரு காமெடி ஆக்ஷன் ஹீரோவாக டாப்பில் இருக்கும்போதே, பரீட்சார்த்தமான படமாக ரெமோவை எடுத்துக் கொண்டிருக்கிறார்.


தேவையற்ற ரிஸ்க்தான்.. ஆனாலும்

தேவையற்ற ரிஸ்க்தான்.. ஆனாலும்

இது தேவையற்ற ரிஸ்க் என்று திரையுலகம் சொன்னாலும், இந்த ரிஸ்கிலும் ஜெயிக்க ஏகப்பட்ட வேலைகளைப் பார்த்து வருகிறார் சிவா.


பெண் வேடம்

பெண் வேடம்

பல கெட்டப்புகளில் இந்தப் படத்தில் தோன்றுகிறார் சிவகார்த்திகேயன். அதில் ஒன்று பெண் வேடம். ஹாலிவுட் மேக்கப் கலைஞரை வைத்து தத்ரூபமாக இந்த வேடத்தை அமைத்துள்ளார்களாம்.


பயிற்சி

பயிற்சி

இந்த வேடத்துக்காக தானே தன் சொந்தக் குரலில், ஒரு பெண்ணைப் போலப் பேசப் போகிறாராம் சிவா. இதற்காக தனியாக பயிற்சியும் எடுத்து வருகிறார்.


பிசி ஸ்ரீராம்

பிசி ஸ்ரீராம்

முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார் பிசி ஸ்ரீராம். ஷூட்டிங்கில் இந்தப் படத்துக்காக சிவா எடுத்து வரும் சிரத்தையைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளார் இந்த ஒளிப்பதிவு மேதை.


அனிருத்

அனிருத்

சிவாவின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் ஒரு பாடலும் பாடியுள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிக்கிறார்.


English summary
Sivakarthikeyan is taking special efforts to dub female voice for one of his characters in Remo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil