»   »  தன்னை தாக்கிய கமல் ரசிகர்களை சிவகார்த்திகேயன் ஏன் போலீசில் மாட்டிவிடவில்லை தெரியுமா?

தன்னை தாக்கிய கமல் ரசிகர்களை சிவகார்த்திகேயன் ஏன் போலீசில் மாட்டிவிடவில்லை தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை கமல் ஹாஸனின் ரசிகர்கள் தாக்கியது பற்றி தற்போது மவுனம் கலைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து அபார வளர்ச்சி அடைந்துள்ளவர் சிவகார்த்திகேயன். யாராவது வம்பு இழுத்தால் ஒதுங்கிச் செல்வார் சிவா என பெயர் எடுத்தவர்.

Sivakarthikeyan talks about attack by Kamal fans

இந்நிலையில் ரெமோ சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட அவர் தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி அழுதார். தந்தி டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம் மதுரை விமான நிலையத்தில் அவரை கமல் ஹாஸனின் ரசிகர்கள் தாக்கியது குறித்து கேட்கப்பட்டது.

இத்தனை நாட்களாக இது குறித்து அமைதி காத்த சிவா கூறுகையில்,

என்னை தாக்கியவர்கள் மீது நான் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கலாம். நான் புகார் கொடுத்திருந்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் சிறைக்கு சென்றால் அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் வாழ்க்கை பாதிக்கப்படும். அதை நான் செய்ய விரும்பவில்லை என்றார்.

English summary
Sivakarthikeyan said that he didn't want to give complaint against Kamal fans who attacked him at Madurai airport thinking about their future.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil