நடிகர் பிரேம் குமார் மகன் திருமணம்.. சிவகார்த்திகேயன் முதல் மாதம்பட்டி ரங்கராஜ் வரை.. வாழ்த்து மழை!

சென்னை: சின்னத்திரையில் நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ், அண்ணாமலை என கலக்கிக் கொண்டிருந்த பிரேம் குமார் தமிழ் சினிமாவில் நாட்டுப்புற பாட்டு படத்தின் மூலம் 1996ல் அறிமுகமானார். வீராப்பு, மச்சக்காரன், உன்னைப்போல் ஒருவன், விக்ரம் வேதா, சர்க்கார், மாஸ்டர், கங்குவா மற்றும் ரெட்ரோ என பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் பிரேம் குமார்.

அவரே பார்க்க இளமையாக இருக்கும் நிலையில், அவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்றும் அவருக்கே திருமணம் ஆகிவிட்டதா என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

Sivakarthikeyan to Madhampatty Rangaraj attends Actor Prem Kumar son Wedding photos goes trending
Photo Credit:

ஏகப்பட்ட சினிமா பிரபலங்களின் நல்ல நட்பை சம்பாதித்துள்ள பிரேம் குமாரின் மகன் திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, கார்த்தி, விஜய் சேதுபதி மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் பிரேம் குமார் மகன் திருமணம்: விக்ரம் வேதா படத்தில் எல்லாம் நண்பனாக நடித்து தனது வில்லத்தனத்தை பிரேம் காட்டும் இடமெல்லாம் வேறலெவலில் இருக்கும். ஒவ்வொரு படத்திலும் தனது முத்திரையான நடிப்பை வெளிக்காட்டி வரும் பிரேம் கடைசியாக கலையரசன் நடிப்பில் வெளியான டிரெண்டிங் படத்திலும் நடித்திருந்தார். அவரது மகன் கெளசிக் சுந்தரம் மற்றும் பூஜிதா கல்யாணராமனின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் பிரேம் குமார் வெளியிட்டுள்ளார்.

Sivakarthikeyan to Madhampatty Rangaraj attends Actor Prem Kumar son Wedding photos goes trending
Photo Credit:

சிவகார்த்திகேயன் முதல் மாதம்பட்டி ரங்கராஜ் வரை: பழம்பெரும் நடிகர் சிவகுமார், கார்த்தி, விஜய் சேதுபதி, சூரி, சிவகார்த்திகேயன், மாதம்பட்டி ரங்கராஜ் என திரைத்துறை பிரபலங்கள் பலர் திருமண வரவேற்பு விழா மற்றும் திருமணம் உள்ளிட்டவற்றில் நேரில் கலந்துக் கொண்டு மணமக்களுக்கு ஆசி வழங்கியுள்ளனர். அந்த புகைப்படங்களை சற்றுமுன் நடிகர் பிரேம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தனது சந்தோஷத்தையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மகனும் நடிகர் தான்: நடிகர் பிரேம்குமாரின் மகன் கெளசிக்கும் நடிகர் தான். சமீபத்தில், அவர் நடித்து வெளியான ராசாத்தி மியூசிக் ஆல்பம் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து ஹிட் அடித்துள்ளது. நடிகர் அஜித், சிவகார்த்திகேயன், அட்லி உள்ளிட்ட பலருடன் நெருங்கி பழகி வருபவர் தான் இந்த கெளசிக் என்பது குறிப்பிடத்தக்கது. மணமக்களுக்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X