சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க தயாராகும் அடுத்த டாப் ஹீரோ

சென்னை : டாப் ஹீரோக்கள் பலர் நடிக்கும் படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பல படங்கள் ஒரே சமயத்தில் தயாராகி வருவதால் எந்த படம் முதலில் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. இந்த படம் ரிலீசான 10 நாட்களில் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக அண்ணாத்த இருந்து வருகிறது.

டாப் ஹீரோக்கள் படங்கள்

டாப் ஹீரோக்கள் படங்கள்

இதைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் பீஸ்ட், சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன், தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களை சன் பிக்சர்ஸ் தான் தயாரித்து வருகிறது. இந்த மூன்று படங்களின் இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் எந்த படம் எப்போது ரிலீசாகும் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அடுத்த ஹீரோ இவர் தான்

அடுத்த ஹீரோ இவர் தான்

இந்நிலையில் அடுத்த டாப் ஹீரோ ஒருவரின் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ், சிவகார்த்திகேயன் நடிக்கும் மற்றொரு படத்தை தயாரிக்க உள்ளதாம். டைரக்டர் யார் என்பது முடிவான பிறகு இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.

வசூல் சாதனை

வசூல் சாதனை

சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த 100 கோடி சாதனையை சிவகார்த்திகேயன் படமும் நிகழ்த்தி உள்ளது திரையுலகில் பலரையும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைய வைத்துள்ளது.

இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன்

இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன்

டாக்டர் படத்தை தொடர்ந்து அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதைத் தொடர்ந்து தற்போது டான், சிங்கப்பாதை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் டான் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல் சிங்கப்பாதை படத்தில் சிவகார்த்திகேயன் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.

Recommended Video

Actress Priyanka Mohan Exclusive | Makeup ரொம்ப விரும்ப மாட்டேன் | Doctor Movie | Filmibeat Tamil
பள்ளி மாணவன் ரோல்

பள்ளி மாணவன் ரோல்

சிங்கப்பாதை படம் பற்றி தொடர்ந்து பல அப்டேட்கள் வெளியாகி வருவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் உடல் எடையை வேறு குறைத்துள்ளாராம். தனுஷ் நடித்த 3 படத்திற்கு பிறகு, சிங்கபாதை படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவனாக யூனிஃபார்ம் போட்டு ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X