»   »  அடங்காத சமூக வலைஞர்கள்... அட, விட்ருங்கப்பா விஷாலை!

அடங்காத சமூக வலைஞர்கள்... அட, விட்ருங்கப்பா விஷாலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷாலுக்கு சமீப மாதங்களாக நேரம் கொஞ்சமல்ல... ரொம்பவே சரியில்லாமல் போய்விட்டது. நடிகர் சங்கத் தேர்தலில் சபதம் போட்ட மாதிரியே ஜெயித்தாலும், அதன் பிறகு எதுவும் பாசிடிவாக நகரமாட்டேன் என்கிறது.

பதவிக் காலமே கிட்டத்தட்ட பாதி முடிந்த பிறகும், இன்னும் நடிகர் சங்கக் கட்டடத்துக்காக ஒரு செங்கல் கூட வைக்கப்படவில்லை. நட்சத்திர கிரிக்கெட்டில் சம்பாதித்த கோடிகள், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என கரைந்துவிடும் போலிருக்கிறது என கமெண்டுகள் பறக்க ஆரம்பித்துவிட்டன.

 Social Media targets Vishal

ஜல்லிக்கட்டுக்காக பிரதமரைச் சந்திக்கப் போகிறேன் என்ற விஷாலின் முதல் கோணலில் ஆரம்பித்தது பிரச்சினை. வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் இளைஞர்கள். விஷால் ஆறு மாதங்களுக்கு முன் பேசியதையும் இப்போது மாற்றிப் பேசுவதையும் வீடியோவாக எடிட் செய்து 'பிராட்காஸ்ட்' பண்ண ஆரம்பித்துவிட்டார்கள் வாட்ஸ்ஆப்பில்.

சில தினங்கள் கழித்து, மாணவர்கள்தான் கலவரத்தைத் தூண்டினார்கள் என விஷால் குற்றம் சாட்டினார் என ஒருவர் நாலு வரி செய்தியைப் பரப்ப, விஷாலை வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள். உடனே விஷால் அழுது புரண்டு ஒரு வீடியோ வாக்குமூலம் தரவேண்டி வந்தது.

நேற்று இன்னொன்று... 'ஆந்திர மாநில மாணவர்கள் "மாநில சிறப்பு அந்தஸ்து" கேட்கும் போராட்டத்திற்கு நடிகர் விஷால் ஆதரவு, நாளை நேரில் சென்று மாணவர்களுக்கு ஆதரவளிக்க முடிவுன்னு செய்தி வருதே, உண்மையா?" என ஒரு தகவல் வாட்ஸ்ஆப்பில் வலம் வர, அய்யய்யோ அப்படி எதுவும் இல்லை என அவர் தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.

இன்னொரு பக்கம், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தொடர்ந்து விஷாலுக்கு பல கேள்விகளை எழுப்பி தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்துக் கொண்டிருக்கிறார்.

'என்னடா இந்த விஷாலுக்கு வந்த சோதனை... ஏகப்பட்ட கல்வி உதவிகளை சொந்த செலவில் செய்கிறார்.. நலிந்தவர்களுக்கு உதவுகிறார். அவர் சொல்லாததையெல்லாம் சொன்னதாக வம்புல மாட்டி விட்டுக்கிட்டே இருக்காங்களே... கொஞ்சம் ரெஸ்ட் குடுங்களேம்ப்பா..' என கமெண்ட் அடிக்கிறார்கள் வலை வம்பர்களின் ரசிகர்கள்!

English summary
The social media users are targeting actor Vishal and spreading rumours on him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil