»   »  திரைப்பட விருதுகள் கேலிக்கூத்தாக மாறிவிட்டன- அரவிந்த் சாமி

திரைப்பட விருதுகள் கேலிக்கூத்தாக மாறிவிட்டன- அரவிந்த் சாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் கேலிக் கூத்தாக மாறிவிட்டன என்று நடிகர் அரவிந்த் சாமி தெரிவித்திருக்கிறார்.

தனி ஒருவன் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய 2 வது இன்னிங்க்ஸைத் தொடங்கியிருக்கும் அரவிந்த் சாமிக்கு, திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

Some of these Awards are so Funny says Aravind Swamy

இந்தியில் டியர் டாட், தமிழில் போகன் இதுதவிர சின்னத்திரையில் தான் நடத்தும் நிகழ்ச்சி போன்றவற்றில் பிஸியாக அவர் வலம்வரத் தொடங்கியிருக்கிறார்.

இந்நிலையில் ''தற்போதைய விருது விழா நிகழ்ச்சிகள் வேடிக்கைக்குரிய ஒன்றாக மாறிவிட்டன. விழாவுக்கு அழைக்கும்போதே உங்களுக்கு விருது வழங்குகிறோம் என்று கூறுகிறார்கள்.

அவ்வாறு உங்களை அழைத்தால் என்னால் நிகழ்ச்சிக்கு வர முடியாது. அந்த விருதை வேறு யாருக்காவது கொடுத்து விடுங்கள் என்று கூறிவிடுங்கள்.

ஏனெனில் நடிகர்கள் அனைவருமே அவர்களுடைய உழைப்புக்காக விருது பெறத் தகுதியானவர்களே. எனவே நீங்கள் விரும்பும் ஒருவருக்கு அந்த விருதைக் கொடுத்து விடுங்கள்.

விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தேர்தலைப் போல ஆக்காதீர்கள்'' என்று நடிகர் அரவிந்த் சாமி தெரிவித்திருக்கிறார்.

குறிப்பிட்டு அவர் எந்த நிகழ்ச்சியையும் கூறவில்லை என்றாலும், அரவிந்த் சாமியின் இந்தக் கருத்து திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமி ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரம் ஏராளமான விருதுகளை அவருக்குப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Aravind Swamy Recently said ''Some Of these Awards are so Funny. Don't Have to make it Look like a Polls''.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil