»   »  புதுமுக ஹீரோயினிடம் பளார், பளார்னு அறை வாங்கினேன்: வைபவ் பேட்டி

புதுமுக ஹீரோயினிடம் பளார், பளார்னு அறை வாங்கினேன்: வைபவ் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கப்பல் படத்திற்காக புதுமுக நடிகையிடம் பளார் பளார் என அறை வாங்கியதாக ஹீரோ வைபவ் தெரிவித்துள்ளார்.

ஷங்கரிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் ஜி. க்ரிஷ் கப்பல் படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்துள்ளார். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை சோனம் பஜ்வா நடித்துள்ளார்.

படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாக உள்ளது. இந்நிலையில் படம் பற்றி வைபவ் கூறுகையில்,

ரசிகர்கள்

ரசிகர்கள்

கப்பல் படத்தில் என் கதாபாத்திரம் இன்றைய இளைஞர்களின் நிலைமையை எடுத்துக்கூறுவதாக உள்ளது. அதனால் இந்த கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களின் மனதை கவரும்.

நண்பர்கள்

நண்பர்கள்

படத்தில் கருணா, அர்ஜுனன், வெங்கட் மற்றும் கார்த்திக் ஆகியோர் எனது நண்பர்கள். நண்பர்களாக இருந்து கொண்டு என் காதலுக்கு வில்லனாக இருப்பார்கள். அவர்கள் என் காதலை பிரிக்க செய்யும் சதியை இயக்குனர் நகைச்சுவை உணர்வோடு தெரிவித்துள்ளார்.

அறை

அறை

படத்தில் ஹீரோயின் என்னை அறையும் காட்சி உள்ளது. என் கன்னம் சிவக்க அவர் பல டேக் வாங்கினார். நானும் வலிக்காத மாதிரியே நடித்தேன். மங்காத்தா படத்தில் கூட நான் தர்ம அடி வாங்கினேன். அதற்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்த படத்திலும் அடி சென்டிமென்ட் ஒர்க்அவுட் ஆனால் மகிழ்ச்சி அடைவேன்.

ஷங்கர்

ஷங்கர்

சினிமாவுக்கு வரும் அனைவரையும் போல நானும் ஷங்கரின் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அந்த ஆசை கப்பல் மூலம் நிறைவேறியுள்ளது. இது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றார் வைபவ்.

English summary
Kappal heroine Sonam Bajwa slapped her hero Vaibhav for a scene but she took so many takes to complete the scene.
Please Wait while comments are loading...