என்ன சொல்றீங்க... ஏகே 61 தீபாவளிக்கு ரிலீசாக வாய்ப்பில்லையா?... எப்போ ரிலீஸ் ?

சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி வரும் ஏகே 61 படம் தீபாவளி ரிலீஸ் என சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வலிமை படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்களால் அடுத்த படத்தை சூப்பர் ஹிட்டாக்க வேண்டும் என படக்குழுவினர் தீயாய் வேலை செய்து வருகின்றனர். ஹெச்.வினோத், அஜித், போனிகபூர் கூட்டணியில் ஏகே 61 படம் உருவாகி வருகிறது.

வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது தான் ஏகே 61 படத்தின் கதை. இதற்காக சென்னை மவுண்ட் ரோடு போன்று ஐதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

புனேயில் ஏகே 61 டீம்

புனேயில் ஏகே 61 டீம்

தொடர்ச்சியாக ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிறைவு பெற்றது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் புனே சென்றதாக கூறப்பட்டது. அங்கு அஜித் தவிர மற்ற நடிகர்கள் நடிக்கும் சீன்கள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

அஜித்தின் பைக் ட்ரிப்

அஜித்தின் பைக் ட்ரிப்

இதற்கிடையில் அஜித் தனது ஃபேவரைட் பிஎம்டபிள்யூ பைக்கை எடுத்துக் கொண்டு ஐரோப்பாவை வலம் வந்து கொண்டிருக்கிறார். அஜித் ஐரோப்பாவில் பைக் ட்ரிப் செல்லும் அசத்தலான போட்டோக்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

இது உண்மையில்லையா

இது உண்மையில்லையா

ஐரோப்பா ட்ரிப் முடித்து வந்ததும் மீதமுள்ள ஒரு சில காட்சிகளில் அஜித் நடிக்க போவதாகவும், அதன் பிறகு டப்பிங் வேலைகளை துவக்க போவதாகவும் கூறப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் ஏகே 61 ஷுட்டிங் முழுவதும் முடிக்கப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

தீபாவளி ரிலீஸ் இல்லையா

தீபாவளி ரிலீஸ் இல்லையா

இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஜுலை மாதத்தில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியிட போகிறார்கள் என கூறப்பட்டது. ஆனால் மற்ற நடிகர்களின் படங்கள் தீபாவளி ரிலீசை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வரும் நிலையில் ஏகே 61 டீம் மட்டும் அமைதி காத்து வருகிறது.

ஏகே 61 ரிலீஸ் எப்போ

ஏகே 61 ரிலீஸ் எப்போ

லேட்டஸ்ட் தகவலின் படி ஏகே 61 படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது. டிசம்பர் 8 ம் தேதி ஏகே 61 படம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எதற்காக படத்தின் ரிலீசை தீபாவளியில் இருந்து டிசம்பருக்கு தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளனர் என்ற காரணம் வெளியிடப்படவில்லை.

தாமதத்திற்கு இவர் தான் காரணமா

தாமதத்திற்கு இவர் தான் காரணமா

ஏற்கனவே ஏகே 61 படத்தின் 80 சதவீதத்திற்கும் மேலான ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தும் ஏன் ரிலீசை தள்ளி வைக்கிறார்கள் என தெரியவில்லை. படத்தில் மஞ்சு வாரியர் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை அவர் ஷுட்டிங்கில் கலந்து கொண்டதாக எந்த தகவலும் இல்லை. இதனால் ரிலீஸ் தள்ளி வைப்பிற்கு அது காரணமா என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 அப்போ இதுவும் தள்ளி போகுமா

அப்போ இதுவும் தள்ளி போகுமா

ஹெச். வினோத் உடனான ஏகே 61 படத்தை முடித்த பிறகு அடுத்ததாக அஜித், விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏகே 61 தாமதமாகும் என்பதால் ஏகே 61 படமும் தாமதமாகும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X