»   »  'கடமை கண்ணியம் கட்டுப்பாடு': இரண்டாவது ஹீரோவாக அறிமுகமாகும் இலங்கை தமிழர்!

'கடமை கண்ணியம் கட்டுப்பாடு': இரண்டாவது ஹீரோவாக அறிமுகமாகும் இலங்கை தமிழர்!

By Shankar
Subscribe to Oneindia Tamil
Varun
தமிழ் சினிமாவில் இலங்கைத் தமிழர்களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதுவரை வெறும் தமிழ் சினிமா ரசிகர்களாக இருந்தவர்கள், இப்போது அதன் ஒரு அங்கமாகவும் மாற ஆரம்பித்துள்ளனர். ஆடுகளம் படத்தில் கவிஞர் ஜெயபாலன் முக்கிய வேடத்தில் அறிமுகமாகி பெயர் பெற்றார்.

இன்னொரு இலங்கைத் தமிழரான வசீகரன் தமிழ் சினிமா தயாரிப்பாளர் மற்றும் தமிழ் சினிமாவை உலக அரங்குக்கு கொண்டு செல்லும் வகையில் நார்வே திரைப்பட விழா என ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் இப்போது வந்துள்ள புது வரவு வருண். நார்வேயில் வசிப்பவர் இவர்.ஆர் கே நாயகனாக நடிக்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தில் இரண்டாவது நாயகனாக அறிமுகமாகிறார்.

இவரது பெற்றோருக்குப் பூர்வீகம் இலங்கை என்றாலும், வருண் பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் நார்வேதானாம்.

மருத்துவத் துறையில் இரண்டாண்டு படிப்பை முடித்துள்ள வருணுக்கு, திடீரென கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தில் இரண்டாம் ஹீரோவாக வாய்ப்பு வந்தது. தயாரிப்பாளர் ஏ சி ஆனந்தன் வருணுக்கு உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் என்கவுன்டர் ஸ்பெலிஸ்ட் குழுவில் ஒருவராக வருகிறார் வருண். இவருக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வருண் கூறுகையில், "இந்தப் படத்தில் நடிக்க வரும் முன்பு, சினிமாவில் நடிப்பது குறித்து எந்த ஐடியாவும் இல்லை. வாய்ப்பு வந்ததும் படிப்புக்கு கொஞ்சம் பிரேக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். படம் முடிந்த பிறகு படிப்பைத் தொடரும் எண்ணமுள்ளது. அதே நேரம் தொடர்ந்து படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளேன்.

படத்தில் நான் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறேன். இதில் நடிக்க தேவையான குறிப்புகளை எனக்குச் சொன்னவர் படத்தின் நாயகன் ஆர்கேதான். அவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். போலீஸ் வேடத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்றெல்லாம் பயிற்சி கொடுத்தவரே அவர்தான்.

ஏதோ வாழ்ந்தோம் போனோம் என்றில்லாமல், வரலாற்றில் ஏதோ ஒரு இடத்தில் நமது பெயரும் பதிவாக வேண்டும் என்ற ஆசை, இந்த வகையில் நிறைவேறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, என்றார்.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தை ஆப்பிள் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ சி ஆனந்தன் தயாரிக்கிறார். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Varun, a Norway resident Sri Lankan is made debut as second hero in RK starrer Kadamai Kannniyam Kattuppadu (K3). Directed by ace film maker Shaji Kailash, the film is the remake of Nana Patekar's critically acclaim Hindi movie Ab Thak Chappan. Varun, who completed his second year Medicine in Hungery is debuting in second lead as an encounter specialist in hero RK's team in the film.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more