»   »  கணவன் வீட்டுக்கு மனைவி வருவது தப்பா?:ஸ்ரீகாந்த்துக்கு நீதிபதி கிடுக்கிப் பிடி!

கணவன் வீட்டுக்கு மனைவி வருவது தப்பா?:ஸ்ரீகாந்த்துக்கு நீதிபதி கிடுக்கிப் பிடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:வந்தனா உங்களது சட்டப்பூர்வ மனைவிதானே, ஒரு கணவனின் வீட்டைத் தேடி மனைவி வருவதில் என்ன தப்பு என்று நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு,சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியது.

வந்தனா தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து விட்டதாகவும், அவரை உடனடியாக வெளியேற்றக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு நேரில் ஆஜரான ஸ்ரீகாந்த்திடம், நீதிபதி ரகுபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். வந்தனா உங்கள் வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக எப்படி நீங்கள் சொல்ல முடியும். வந்தனா சட்டப்படி உங்கள் மனைவிதானே, இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

கணவன் வீட்டைத் தேடி மனைவி வருவதில் என்ன தவறு. இந்த விவகாரத்தில் உங்களுக்கு உள்ள பிரச்சினைகளை வந்தனா வீட்டாரிடம் சமரசமாக பேசி விட்டு வாருங்கள் என்று கூறி விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

நீதிபதியின் இந்த உத்தரவு, ஸ்ரீகாந்த்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, வந்தனா கொடுத்த புகாரின் அடிப்படையில் தன்னையும் தந்தை கிருஷ்ணமாச்சாரி, தாய் ஜெயந்தி ஆகியோரை போலீஸார் கைது செய்யக் கூடும் என்று அஞ்சி தங்களுக்கு முன் ஜாமீன் கேட்டு ஸ்ரீகாந்த் தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விவகாரத்தில் நடந்த உண்மை என்ன என்பதை விசாரித்து நீதிமன்றத்தில் 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதி, முன் ஜாமீன் குறித்து நாளை முடிவு செய்வதாக அறிவித்தார்.

இதற்கிடையில் ஸ்ரீகாந்த்துடன் தங்கள் மகளை சேர்த்து வைக்கும்படி, வந்தனாவின் பெற்றோர் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் உதவியை நாடியுள்ளனர். முதன்முதலாக ஸ்ரீகாந்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய அந்த தயாரிப்பாளர் கூறினால் ஸ்ரீகாந்த் ஏற்றுக் கொள்வார் என வந்தனாவின் பெற்றோர் நினைப்பதாக தெரிகிறது.

சென்னையைச் சேர்ந்த மாடலான வந்தனாவை காக்கிநாடாவில் வைத்து ரகசிய கல்யாணம் செய்தார் ஸ்ரீகாந்த். அவரது வீட்டிலேயே இரவும், பகலுமாக தங்கி உடல்ரீதியாகவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தார்.

முறைப்படி அவரை கல்யாணம் செய்ய இருந்த நிலையில் வந்தனா குடும்பத்தினர் மீது வங்கிகளில் நிதி மோசடி வழக்குகள் இருப்பது தெரிய வந்ததால் அவரை வெட்டிவிட்டார்.

தன்னையும் கணவரையும் பிரிக்க ஸ்ரீகாந்தின் உறவினரான கீதா என்பவர் முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார். ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் வந்தனா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil