»   »  அழுதே சாதிக்க நினைக்கும்வந்தனா: ஸ்ரீகாந்த் காட்டம்

அழுதே சாதிக்க நினைக்கும்வந்தனா: ஸ்ரீகாந்த் காட்டம்

Subscribe to Oneindia Tamil

பெண்களுக்கே உரிய அழுகை ஆயுதத்தைப் பயன்படுத்தி தான் நினைத்ததை சாதிக்கத் துடிக்கிறார் வந்தனா. ஆனால் அதுதான் நடக்காது என்று ஸ்ரீகாந்த் காட்டமாக கூறியுள்ளார்.

வந்தனாவின் அதிரடி ஆக்ஷனால், கதி கலங்கிப் போயுள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த். வந்தனா தனது தாயார், வக்கீலுடன் தனது வீட்டில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஸ்ரீகாந்த் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அவரது பெற்றோரும் ஹோட்டல் வாசத்தில்தான் உள்ளனர்.

ஸ்ரீகாந்த் வீட்டில் இப்போது வயது முதிர்ந்த அவரின் பாட்டியும், உறவினர் ஒருவரும்தான் உள்ளனர். சில வேலைக்காரர்களும் உள்ளனர். இந்த நிலையில் வந்தனாவின் போக்கு குறித்து காட்டமாக கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.

வந்தனாவின் போராட்டம் குறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், நாங்கள் எங்களது பாதுகாப்பு கருதித்தான் வீட்டில் இருக்காமல் வெளியேறி விட்டோம். எனது பாட்டிக்கு மிகவும் வயதாகி விட்டது, அவரால் சரிவர நடக்கக் கூட முடியாது. இதனால்தான் அவரை வீட்டிலிருந்து அழைத்து வர முடியவில்லை.

அவர் நிலைமை என்ன என்று கவலையாக உள்ளோம். வந்தனா செமையாக நடிக்கிறார். நடிகைகளேயே மிஞ்சி விட்டது அவரது நடிப்பு.

பெண்கள் எதையாவது சாதிக்க வேண்டும் என்றால் அழுது, அடம் பிடித்து சாதித்து விடுவார்கள். அதே ஆயுதத்தைத்தான் வந்தனாவும் கையில் எடுத்துள்ளார்.

நிருபர்கள் வீட்டுக்கு வந்தால் மட்டுமே கண்ணீரும் கம்பலையுமாக போஸ் கொடுத்து கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர்கள் அந்தப் பக்கம் போன பின்னர் தனது தாயாருடன் படு ஜாலியாகத்தான் இருக்கிறார். நிம்மதியாக இருக்கிறார்.

அடியாட்களுடன் எனது வீட்டிற்குள் புகுந்துள்ளார் வந்தனா. எந்தப் பெண்ணாவது, தனது கணவனை இப்படிக் கேவலப்படுத்துவார்களா உண்மையில் அவருக்கு என்னுடன் வாழும் நோக்கம் எல்லாம் இல்லை.

வந்தனாவின் பிரச்சினையால் எனது பெற்றோர் மிகவும் கவலையுடன் உள்ளனர். மன உளைச்சலில் மூழ்கியுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் இப்பிரச்சினையில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார ஸ்ரீகாந்த்.

என்ன நடக்குதுண்ணே புரியலையே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil