»   »  வந்தனாவுடன் சேர்ந்து வாழ ஸ்ரீகாந்த் திட்டம்?

வந்தனாவுடன் சேர்ந்து வாழ ஸ்ரீகாந்த் திட்டம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வந்தனா தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலை சென்னை வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.

தனது வீட்டுக்குள் புகுந்துள்ள வந்தனா மீது வழக்குப் பதிவு செயது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் தரப்பில் வழக்கு போடப்பட்டது.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வந்தனா மீது வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றார் வந்தனா. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின் படி, வடபழனி காவல் நிலையத்தில் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டார்.

இந்த நிலையில், வந்தனா கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீகாந்த் மீதும் வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த், தந்தை கிருஷ்ணமாச்சாரி, தாயார் ஜெயந்தி ஆகியோருக்கு முன்ஜாமீன் கிடைத்தது.

அதன் அடிப்படையில் இன்று காலை வடபழனி காவல் நிலையத்திற்கு ஸ்ரீகாந்த் வந்தார். இன்ஸ்பெக்டர் முன்னிலையில் கையெழுத்துப் போட்ட அவரிடம் சிறிது நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் ஸ்ரீகாந்த் வெளியே வந்தார்.

நீண்ட தாடி, குடுமியுடன் காணப்பட்ட ஸ்ரீகாந்த்த்தை காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேட்டபோது,

இதுவரை நடந்தது எல்லாம் பத்திரிக்கைகள் மற்றும் டி.வி. வழியாக எல்லோருக்கும் தெரியும். புதுசாக ஒன்றும் சொல்வதற்கில்லை.

எங்கள் வீட்டுக்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது. நாங்கள் தான் வீட்டுக்கு போகாமல் இருக்கிறோம். 85 வயதான என் பாட்டி அந்த வீட்டில் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்றார் ஸ்ரீகாந்த்.

முன்னதாக காவல் நிலையத்தில் போலீஸார் நடத்திய விசாரணையின்போது, எனது திருமணத்தை மறைக்க நினைத்தததில்லை. ஊரறிய சிறப்பாக நடக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் பல நிகழ்ச்சிகள் நடந்து விட்டன.

வந்தனாவுடன் சேர்ந்து வாழ்வது குறித்து யோசித்துக் ெகாண்டுள்ளேன் என்று கூறினாராம் ஸ்ரீகாந்த்.

வந்தனாவையும், ஸ்ரீகாந்த்தையும் சேர்ந்து வாழ வைக்க கவுன்சிலிங் மூலம் முயற்சிக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil