»   »  வற்புறுத்தலால் வந்தனாவை மணந்தேன்-ஸ்ரீகாந்த்

வற்புறுத்தலால் வந்தனாவை மணந்தேன்-ஸ்ரீகாந்த்

Subscribe to Oneindia Tamil

வற்புறுத்தலின் பேரில்தான் நான் வந்தனாவைத் திருமணம் செய்து கொண்டேன் என்று நடிகர் ஸ்ரீகாந்த் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள முன்ஜாமீன் நிபந்தனைப்படி வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி வருகிறார் ஸ்ரீகாந்த். நேற்று அவர் ஆஜராக வந்தபோது போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த விசாரணை எழுத்துப் பூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. ஸ்ரீகாந்த் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், வற்புறுத்தலின் பேரில்தான் தான் வந்தனாவைத் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

ஸ்ரீகாந்த் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது,

நான் வந்தனாவைக் காதலித்தது, ரகசியத் திருமணம் செய்து கொண்டது அனைத்தும் உண்மை. இதை நான் மறுக்கவில்லை. ஆனால் வற்புறுத்தலின்பேரில்தான் வந்தனாவை நான் திருமணம் செய்து கொண்டேன்.

அதன் பின்னர் எனது பெற்றோர் சம்மதத்துடன் வந்தனாவை ஊரறிய திருமணம் செய்ய விரும்பினேன். அதனால்தான் நிச்சயதார்த்தமும் நடந்தது.

ஆனால் அந்த நிமிடம் வரை வந்தனா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இருந்த கிரிமினல் வழக்குகள், மோசடிப் புகார்களை என்னிடம் அவர்கள் தெரிவிக்காமல் மறைத்து விட்டனர். ஒரு வார்த்தை கூட வந்தனா அதைப் பற்றிச் சொல்லவில்லை.

பத்திரிகைககளில் பார்த்துத்தான் அதை நான் தெரிந்து கொண்டேன், அதிர்ச்சி அடைந்தேன். மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வந்தனாவை உடனடியாக மணக்க நான் விரும்பவில்லை. அதனால்தான் திருமணத்தை நிறுத்தி வைத்தோம்.

வந்தனா மீதுள்ள வழக்குகள் முடிவடைந்து, நல்ல தீர்ப்பு வந்த பின்னர் ஊரறிய திருமணம் செய்யவே நான் நினைத்திருந்தேன்.

ஆனால் வந்தனாவும், அவரது பெற்றோரும் அவசரப்பட்டு விட்டனர். தனது பெற்றோரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு எனது வீட்டுக்குள் ஊடுறுவி விட்டார் வந்தனா.

கஷ்டப்பட்டு நான் நடித்து சம்பாதித்த பணத்தில் கட்டிய வீட்டில் என்னால் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாளிகை போல எனது வீடு இருந்தும் ஒரு ஹோட்டலில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்துள்ளது.

மன உளைச்சல் ஏற்பட்டு நிம்மதியில்லாமல் தவிக்கிறேன். எனது திரைப்படத் தொழிலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பணக் கஷ்டமும் ஏற்பட்டுள்ளது. பெற்றோருக்காகத்தான் நான் இப்போது உயிரோடு இருக்கிறேன். எனக்கு வாழவே பிடிக்கவில்லை.

வந்தனாவின் செயலால் நான் மிகுந்த அவமானப்பட்டு விட்டேன். இந்த நிலையில், வந்தனாவுடன் சேர்ந்து வாழ்வது குறித்து நான் சிந்திக்கவில்லை. அதுகுறித்து இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.

நேற்று மாலை வந்தனாவும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார். அப்போது அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். வாக்குமூலமும் பெற்றனர். இதுவும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, வந்தனா கொடுத்துள்ள பதிவுத் திருமணச் சான்றிதழ் குறித்து விசாரணை நடத்தவும், அதன் ஒரிஜினல் சான்றிதழைப் பெறவும் காக்கிநாடாவுக்கு ஒரு போலீஸ் குழு சென்றுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil