»   »  எட்டப்பன் ஸ்ரீகாந்த்!!

எட்டப்பன் ஸ்ரீகாந்த்!!

Subscribe to Oneindia Tamil


பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புத்துணர்ச்சியுடன் நடிக்க வருகிறார் 'வந்தனா புகழ்' ஸ்ரீகாந்த்.

Click here for more images

சினேகா விவகாரத்தில் சலசலப்புக்கு ஆளாகி பின்னர் ஒரு வழியாக அதிலிருந்து மீண்டும் பிக்கப் ஆகி ஸ்மூத்தாக போய்க் கொண்டிருந்த ஸ்ரீகாந்த்தின் மார்க்கெட், வந்தனா என்ற பிரேக்கால் தட்டுத் தடுமாறி தடாலடியாக வீழ்ந்தது.

கோர்ட், வக்கீல், போலீஸ் என பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் ஒரு வழியாக வந்தனாவை தனது மனைவியாக ஏற்றார் ஸ்ரீகாந்த். ஊரறிய திருமணத்தையும், திருமண வரவேற்பையும் முடித்துக் ெகாண்டு இல்லறத்தை நல்லபடியாக ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில், சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அரிதாரம் பூசி அசத்த வருகிறார் ஸ்ரீகாந்த். தமிழிலும், தெலுங்கிலுமாக மொத்தம் 4 படங்களில் நடிக்கவுள்ளார் ஸ்ரீகாந்த்.

முதலில் நடிக்கவுள்ள படம் பூ. முதலில் இப்படத்தின் பெயரை 'ம்..' என வைத்திருந்தனர். இப்படத்தை இயக்கப் போவது, ஸ்ரீகாந்த்தை தமிழில் ரோஜாக் கூட்டம் மூலம் அறிமுகப்படுத்திய சசிதான். பரபர கிளாமர் தேவதை பார்வதி மெல்டன், ஸ்ரீகாந்த்துடன் ஜோடி சேருகிறார்.

இதையடுத்து ஸ்ரீகாந்த் நடிக்கவுள்ள படம் எட்டப்பன். நவ்யா நாயர் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் பூஜை நாளை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடக்கிறது.

மீண்டும் நடிக்க வந்திருப்பது குறித்து ஸ்ரீகாந்த் சந்தோஷமாக உள்ளார். அவர் கூறுகையில், மீண்டும் தொழிலுக்குத் திரும்புகிறேன். தமிழில் பூ, எட்டப்பன் தவிர தெலுங்கில் இரு படங்களில் நடிக்கவுள்ளேன். அதிலும் நான் சிங்கிள் ஹீரோதான். எனது இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளார் ஸ்ரீகாந்த்.

Read more about: honeymoon, srikanth, vandana, yettappan
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil