»   »  செப்7: ஸ்ரீகாந்த்-வந்தனா ரிசப்ஷன்

செப்7: ஸ்ரீகாந்த்-வந்தனா ரிசப்ஷன்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி வந்தனாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி செப்டம்பர் 7ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

ஒரு பக்க தமிழ் பிளஸ் தெலுங்குப் படத்தின் கதையைப் போலவே அதிரடி, ஆக்ஷன், திடீர் திருப்பங்களுடன் கூடிய படமாக வந்தனா, ஸ்ரீகாந்த் திருமணக் கதை சமீபத்தில் நடந்தேறியது.

முதலில் இருவருக்கும் திருமணம் என்ற அறிவிப்பு வெளியானது. சில நாட்களில் வந்தனா குடும்பத்தார் மீது வழக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து திருமண ஏற்பாடுகளை நிறுத்தினர் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே சமரசப் பேச்சுக்கள் நடந்தன. திடீர் திருப்பமாக ஸ்ரீகாந்த் வீட்டில் அதிரடியாக குடியேறினார் வந்தனா. எனக்கும், ஸ்ரீகாந்த்துக்கும் கல்யாணம் நடந்து விட்டது என்றும் அறிவித்து ஆச்சரியப்படுத்தினார். புகைப்பட ஆதாரங்களையும் எடுத்து விட்டார்.

இதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் கோர்ட் படியேறி பல மனுக்களை, புகார்களைக் கொடுத்தனர். இப்படியாக போய்க் கொண்டிருந்த இந்த விவகாரத்தில் மற்றொரு திருப்பமாக, வந்தனாவுடன் சமரசமாக போக முடிவு செய்தார் ஸ்ரீகாந்த். அவரது குடும்பத்தினரும் வந்தனாவை மருமகளாக ஏற்க சம்மதித்தனர். இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என ஸ்ரீகாந்த் அறிவித்தார்.

இதையடுத்து குடும்பத்தோடு வந்தனா வீட்டுக்கு அபீஷியலாகப் போனார் ஸ்ரீகாந்த். விருந்து சாப்பிட்டு முடித்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி குறித்து இரு வீட்டாரும் விவாதித்தனர். தற்போது வரவேற்பு தேதியைக் குறித்து விட்டனர்.

செப்டம்பர் 7ம் தேதி திருமண வரவேற்பை இரு வீட்டாரும் சேர்ந்து நடத்தவுள்ளனர். திருமண வரவேற்புக்குரிய அழைப்பிதழ் அச்சிடப்பட்டு வருகிறதாம். திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பிதழை கொடுக்கவுள்ளார் ஸ்ரீகாந்த்.

கல்யாணம்தான் சிம்பிளாக நடந்து விட்டது, வரவேற்பை தடபுடலாக நடத்த ஸ்ரீகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளதால் அவரது விருப்பபடி ஏற்பாடுகள் விசேஷமாக நடந்து வருகிறதாம்.

வாழ்க பல்லாண்டு (சண்டை போடாமல்)!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil