»   »  ஜோடி போட்டு வந்த வந்தனா-ஸ்ரீகாந்த்!

ஜோடி போட்டு வந்த வந்தனா-ஸ்ரீகாந்த்!

Subscribe to Oneindia Tamil

கல்யாண கலாட்டா சுபமாக முடிந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த்தும், அவரது மனைவி வந்தனாவும் ஜோடியாக ராம் கோபால் வர்மாவின் ஆக் படத்தைப் பார்த்து ரசித்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

காக்கிநாடாவில் ரகசியக் கல்யாணம், பின்னர் சென்னையில் கலாட்டா என பெரும் சிக்கலில் மாட்டித் தவித்த நடிகர் ஸ்ரீகாந்த், ஒரு வழியாக பிரச்சினைகள் சரியாகி மனைவி வந்தனாவுடன் இணைந்து வாழ முடிவு செய்துள்ளார்.

இவர்களது கல்யாண வரவேற்பு வருகிற 7ம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வந்தனாவும், ஸ்ரீகாந்தும் முகம் நிறைய மலர்ச்சியும், மனம் நிறைய மகிழ்ச்சியுமாக ஜோடி போட்டு சென்னை சத்யம் தியேட்டருக்கு வந்தனர்.

அங்கு நேற்று ரிலீஸ் ஆன ராம் கோபால் வர்மாவின் ஆக் (ஷோலே படத்தின் ரீமேக்) படத்தைப் பார்க்கவே இருவரும் வந்தனர். அவர்களைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் இருவரையும் வரவேற்றனர். சில ரசிகர்கள் ஸ்ரீகாந்த்துக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் ரசிகர்களுக்கு தேங்க்ஸ் சொல்லியபடி உள்ளே சென்ற ஸ்ரீகாந்த் தம்பதியினர் வர்மா படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.

இருவரும் தற்போது தங்களது திருமண வரவேற்பு அழைப்பிதழை திரையுலகினருக்கு ஜோடியாகவே சென்று கொடுத்து வருகிறார்களாம். உறவினர்களுக்கு இருவரது குடும்பத்தினரும் கொடுத்து வருகிறார்களாம்.

சந்தோஷமாக இருக்கிறோம் - ஸ்ரீகாந்த்

இதற்கிடையே நடந்து முடிந்த குழப்பம் நீங்கி தற்போது இருவரும் சந்தோஷமாக இருப்பதாக ஸ்ரீகாந்த்தும், வந்தனாவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், நானும் வந்தனாவும் திருமணத்துக்கு தயாரான போது பத்திரிகையில் வந்த செய்தியால் பதற்றமானேன். என்ன செய்வது என்று ஆற, அமர யோசிக்க முடியாமல் போய் விட்டது.

இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே இடைவெளி, கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. பொறுமையாக இருந்திருக்கலாம். எல்லோரும் அவசரப்பட்டு விட்டதால் குழப்பமாகி விட்டது.

எல்லாம் நடந்து முடிந்து விட்டது. இப்போது நானும் வந்தனாவும் சந்தோஷமாக இருக்கிறோம். எங்களு காதல் குறித்துத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்,சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

எந்த நிர்பந்தமும் இல்லாமல் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். வந்தனாவை என்னால் மறக்க முடியாது. அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்.

வந்தனாவை எனது குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்துப் போய் விட்டது. வீட்டு வேலைகளை அவரே இழுத்துப் போட்டுக் போண்டு செய்கிறார் என்றார்.

வந்தனாவோ, இரு குடும்பத்தினரும் பெரிய மனசு பண்ணி எங்களை சேர்த்து வைத்துள்ளனர். நான் நம்பிக்கை இழக்காமல் இருந்தேன். அந்த நம்பிக்கை இன்று கை கூடியுள்ளது. நடந்ததற்காக இருவரும் மாறி மாறி மன்னிப்பு கேட்டுக் கொண்டோம் என்றார்.

சரி, ஹனிமூன் டிரிப் எப்பப்பா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil