»   »  விமானம் வாங்க ஆசை தான் ஆனால் காசு பணம் துட்டு மணி மணி இல்லை: ஷாருக்கான்

விமானம் வாங்க ஆசை தான் ஆனால் காசு பணம் துட்டு மணி மணி இல்லை: ஷாருக்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமாக விமானம் வாங்க ஆசையாக உள்ளபோதிலும் பணம் இல்லையாம்.

பாலிவுட்டின் வெற்றி ஹீரோக்களில் ஒருவர் ஷாருக்கான். அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் அவரும் ஒருவர். அவர் ஐபிஎல் அணி, சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார்.

மேலும் ஏகப்பட்ட விளம்பரப் படங்களில் நடித்து கை நிறைய, பை நிறைய சம்பாதிக்கிறார்.

விமானம்

விமானம்

சொந்தமாக விமானம் ஒன்று வாங்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. ஆனால் விமானம் வாங்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்கிறார் ஷாருக்கான்.

படங்கள்

படங்கள்

நான் சம்பாதிக்கும் பணத்தை படங்களில் போடுகிறேன். சொந்த விமானத்தில் பயணம் செய்ய விரும்புகிறேன். அவ்வாறு பயணம் செய்தால் நிறைய வேலை செய்ய முடியும் என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பணம்

பணம்

படமா, பணமா என்றால் நான் படத்தை தான் தேர்வு செய்வேன். அதனால் தான் நான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் படத்தில் போடுகிறேன் என்று ஷாருக் கூறியுள்ளார்.

ஒரு நாள்

ஒரு நாள்

நான் நிச்சயம் பணம் சேமித்து வைத்து ஒரு நாள் விமானம் வாங்குவேன் என்று ஷாருக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

English summary
He is one of the highest paid actors of Bollywood, but there are things that even Shah Rukh Khan can’t buy. The cine icon says he aspires to buy a plane, but is running low on funds as he has used them up to make films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil