»   »  விளம்பரம் தேடுவதில் தனுஷுக்கு 'குரு' ஷாருக்கான்

விளம்பரம் தேடுவதில் தனுஷுக்கு 'குரு' ஷாருக்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தான் நடித்து வரும் ஃபேன் படத்திற்கு விளம்பரம் தேட ஷாருக்கான் ஆள் வைத்து தனது வீட்டு காம்பவுண்டு சுவரில் கிறுக்கவிட்டது தெரிய வந்துள்ளது.

மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் வீடான மன்னத்தின் காம்பவுண்டு சுவரில் லவ் யூ எஸ்.ஆர்.கே., 15ம் தேதி சந்திப்போம், இப்படிக்கு கௌரவ் என்று யாரோ கிறுக்கியிருந்தனர். யார் கிறுக்கியது என்று ஷாருக்கான் வீட்டு காவலாளிகளுக்கு கூட தெரியவில்லை.

இந்த சம்பவத்தால் ஷாருக் வீடு உள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஃபேன்

ஃபேன்

ஷாருக்கான் மனீஷ் ஷர்மா இயக்கத்தில் ஃபேன் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் அந்த படத்திற்கு விளம்பரம் தேடத் தான் ஷாருக்கான் ஆள் விட்டு தனது வீட்டு சுவரில் கிறுக்க வைத்துள்ளார்.

விளம்பரம்

விளம்பரம்

ஃபேன் படத்தின் டீஸர் நேற்று யூடியூப்பில் வெளியானது. அதற்கு விளம்பரம் தேடவே ஷாருக்கான் இப்படி ஒரு ஐடியா கொடுத்துள்ளார். அவர் ஐடியா அருமையாக ஒர்க்அவுட்டாகிவிட்டது என்றே கூற வேண்டும்.

கௌரவ்

கௌரவ்

ஷாருக் வீட்டு சுவரில் கையெழுத்திட்டிருந்த கௌரவ் யார் என்று பார்த்தால் ஃபேன் படத்தில் வரும் அவரது கதாபாத்திரத்தின் பெயர். படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஒரு கதாபாத்திரத்தில் ஷாருக் பெரிய நடிகர் ஷாருக்காகவே நடிக்கிறார். மற்றொரு கதாபாத்திரமான கௌரவ் ஷாருக்கின் தீவிர ரசிகர்.

ஷாருக்

ஷாருக்

படத்திற்கு நல்லா தேடியிருக்கிறார் விளம்பரம். ஃபேன் ஏப்ரல் 15ம் தேதி ரிலீஸாக உள்ளது. அதற்கு தான் 15ம் தேதி சந்திப்போம் என்று சுவரில் எழுத வைத்துள்ளார்.

என்ன நடிப்பு!

என்ன நடிப்பு!

ஒரு நாள் வீட்டை விட்டுவிட்டு எங்கும் செல்ல முடிய மாட்டேன்கிறது, யாராவது சுவரில் கிறுக்கிவிடுகிறார்கள். அதிர்ச்சி அடைந்துள்ளேன் என்று ட்விட்டரில் ஷாருக் உலக மகா நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீங்க எல்லாம் நல்லா வருவீங்க ஷாருக்!

கொலவெறி

கொலவெறி

தனுஷ் தனது 3 படத்தில் வந்த ஒய் திஸ் கொலவெறி பாடலை ஆள் வைத்து விளம்பரம் செய்ததை பெரிதாக பேசினார்கள். தற்போது ஷாருக்கான் செய்ததை என்ன சொல்வார்களாம்?

English summary
King Khah has turned publicity stunt Khan by making somebody to do graffiti on the wall of his house just to promote his upcoming movie FAN.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil