»   »  சினிமா ஒரு மாயாபஜார்: இங்கே தோற்பவர் ஜெயிப்பார், ஜெயிப்பவர் தோற்பார்- ரஜினி

சினிமா ஒரு மாயாபஜார்: இங்கே தோற்பவர் ஜெயிப்பார், ஜெயிப்பவர் தோற்பார்- ரஜினி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா ஒரு அபூர்வ உலகம், இங்கே ஜெயித்தவர்கள் தோற்று இருக்கிறார்கள், தோற்றவர்கள் ஜெயித்து இருக்கிறார்கள் என கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இந்தியாவில் சினிமா தயாரிப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இணைந்து, நேற்று மாலை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை தொடங்கின.

தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த கொண்டாட்ட விழாவின் முதல் நாளான நேற்று, முதலமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். விழாவுக்கு வந்தவர்களை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சி.கல்யாண் வரவேற்றார்.

விழாவில் கலந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாவது....

கஷ்டப்பட்டு நடித்தேன்....

கஷ்டப்பட்டு நடித்தேன்....

‘‘இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தியதற்காக, முதல்-அமைச்சருக்கு என் நன்றி. என் திரையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. அன்றும் சரி, இன்றும் சரி, நான் கமல் ரசிகன். இரண்டு பேரும் சேர்ந்து ஏழு எட்டு படங்கள் நடித்தோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடித்தேன்.

நன்றி..நன்றி...நன்றி...

நன்றி..நன்றி...நன்றி...

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில், சாதாரண ஆளாக இருந்த என்னை சினிமாவில் பெரிய ஆளாக்கிய கே.பாலசந்தருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு நன்றி.

கமல் விஷயமறிந்தவர்....

கமல் விஷயமறிந்தவர்....

சமூகத்தில் இவ்வளவு பெரிய ஆளாக என்னை மதிக்கிற அனைவருக்கும் நன்றி. அது, சினிமா எனக்கு கொடுத்த பிச்சை. 38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். நடிப்பதை தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. வேறு இரண்டு மூன்று விஷயங்களில் இறங்கி, என்னால் ஜெயிக்க முடியவில்லை. ஆனால், கமல் அப்படி அல்ல. நிறைய விஷயங்கள் தெரிந்தவர்.

நெஞ்சில் நிற்கும் இயக்குநர்கள்.....

நெஞ்சில் நிற்கும் இயக்குநர்கள்.....

சினிமாவில் வில்லனாக இருந்த என்னை காமெடியாக நடிக்க வைத்தவர், கே.பாலசந்தர். ஆறில் இருந்து அறுபது வரை படத்தில், என்னை சோகமாக நடிக்க வைத்தவர், எஸ்.பி.முத்துராமன். முள்ளும் மலரும் படத்தில் இயல்பாக நடிக்க வைத்தவர், மகேந்திரன். பாட்ஷா படத்தின் மூலம் என்னை எங்கேயோ கொண்டு போனவர், சுரேஷ் கிருஷ்ணா. முத்து, படையப்பா, கோச்சடையான் ஆகிய படங்களில் கே.எஸ்.ரவிகுமார், சந்திரமுகியில் பி.வாசு இவர்கள் எல்லாம் மறக்க முடியாதவர்கள்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய்....

இதற்குத்தானே ஆசைப்பட்டாய்....

இவர்கள் எல்லோரும் என்னை உயரத்தில் தூக்கிக் கொண்டு போய் வைத்து விட்டு, போய் விட்டார்கள். நான் தனிமையில் இருக்கிறேன். ‘டாப்'பில் இருப்பவர்களுக்கு இதுதான் பிரச்சினை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜிராவ் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.

சினிமா ஜாம்பவான்கள்....

சினிமா ஜாம்பவான்கள்....

சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த தாதா சாகேப் பால்கே, சாந்தாராம், எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், நாகிரெட்டி, சக்ரபாணி இவர்கள் எல்லாம் போட்ட சாப்பாட்டை இப்போது நாம் வேறுவிதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

சினிமா பிரமிப்பு....

சினிமா பிரமிப்பு....

சினிமா இப்போது எவ்வளவோ முன்னேறினாலும், சந்திரலேகா மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா? அவ்வையார் படத்தை நான் பத்து வயதில் பார்த்தேன். அந்த பிரமிப்பு இன்னும் இருக்கிறது.

மகான்களுக்கு அஞ்சலி....

மகான்களுக்கு அஞ்சலி....

எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண், நாடோடி மன்னன், சிவாஜி நடித்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய படங்கள் எல்லாம் காவியங்கள். அந்த காவியங்களை படைத்து அமரர்களாகிப்போன மகான்களின் பாதங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்துகிறேன்.

கமலும் மகான் தான்....

கமலும் மகான் தான்....

அதேபோன்ற இன்னொரு மகான், கமல்ஹாசன். அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் ஆகிய படங்களை அவரை தவிர, வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது.

மாயாபஜார்.....

மாயாபஜார்.....

சினிமா, ஒரு வித்தியாசமான தொழில். இதில் தயாரிப்பாளர்கள்தான் எப்போதுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் தோற்று இருக்கிறார்கள். இது, ஒரு மாயாபஜார். அபூர்வமான உலகம்.

பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்...

பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்...

நான், 38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். கமல், 55 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். நம் வாழ்நாளில் பார்க்க முடிகிற மிக திறமையான நடிகர் கமல். இப்போது வந்திருக்கிற இளம் நடிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, பொருளாதார ரீதியாக உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்' என இவ்வாறு ரஜினிகாந்த் உரையாற்றினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Saturday marked a rare confluence of film stars from across the southern states in the city, but there was no doubt who the heroine was. J Jayalalithaa declared the centenary celebrations of Indian cinema open at the Jawaharlal Nehru indoor stadium.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more