எஸ்டிஆர் 48 அறிவிப்பு... ஆர்வமாய் காத்திருக்கும் சிம்பு ரசிகர்கள்

சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்துள்ள மாநாடு படம் தீபாவளிக்கு ரிலீசாவதாக சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது. சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படமும், லிட்டில் சூப்பர் ஸ்டாரின் மாநாடு படமும் ஒரே நாளில் ரிலீசாவது சிம்பு ரசிகர்களை மட்டுமல்ல அவரையும் சந்தோஷத்தில் குதிக்க வைத்துள்ளது.

மாநாடு படத்தை முடித்த கையோடு பத்து தல, வெந்து தணிந்தது காடு படங்களின் ஷுட்டிங்கை துவக்கி விட்டார் சிம்பு. இதில் கெளதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை, சிம்பு கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 26 ம் தேதி துவங்கியது. இதற்கு முன் கெளதம் மேனன், சிம்பு கூட்டணியில் உருவான விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

புதிய லுக்கில் சிம்பு

புதிய லுக்கில் சிம்பு

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் கிராமத்து கதையான வெந்து தணிந்தது காடு படத்திற்காக உடல் எடையை தாறுமாறாக குறைத்து, புதிய லுக்கிற்கு மாறி உள்ளார் சிம்பு. இந்நிலையில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகி உள்ளாராம்.

அடுத்தடுத்த பட வாய்ப்புகள்

அடுத்தடுத்த பட வாய்ப்புகள்

சிம்பு - தயாரிப்பாளர்கள் இடையேயான ரெட் கார்டு விவகாரம் சமீபத்தில் முடிவுக்கு வந்ததை அடுத்து, ஏராளமான பட வாய்ப்புகள் சிம்புவிற்கு வந்த வண்ணம் உள்ளன. தயாரிப்பாளர்கள் பலரும் தங்கள் படத்தில் சிம்புவை நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இன்று எஸ்டிஆர் 48

இன்று எஸ்டிஆர் 48

லேட்டஸ்ட் தகவலின்படி, எஸ்டிஆர் 48 என பெயரிடப்பட்டுள்ள சிம்புவின் 48 வது படம் பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 18 ம் தேதியான இன்று வெளியிடப்பட உள்ளதாக ட்விட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை Think Music India பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பு

புதிய அறிவிப்பு

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாக உள்ள காமெடி படமான, டைரக்டர் கோகுலின் கொரோனா குமார் தான் சிம்புவின் 48 வது படம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய அறிவிப்பு இன்று வெளியாக உள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

நடிகர் சிம்புவின் பிரச்சனையை தீர்த்து வைத்த ஐசரி கணேஷ்... இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சிம்புவின் 9 சென்டிமென்ட்

சிம்புவின் 9 சென்டிமென்ட்

வழக்கமாக சிம்புவின் புதிய படங்கள் பற்றிய அறிவிப்பு, டீசர், ஃபஸ்ட்லுக் போன்றவை 9 கூட்டுத் தொகை கொண்ட நேரத்திலேயே வெளியிடப்படும். அதனால் இன்று வெளியாக உள்ள எஸ்டிஆர் 48 படத்தின் அறிவிப்பும் 9 சென்டிசென்ட் கொண்ட நேரத்திலேயே வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சிம்பு தனது முதல் படம் துவங்கி தற்போது வரை கடைபிடித்து வரும் 9 சென்டிமென்ட் காரணமாக தான் படத்தின் அறிவிப்பும் 18 ம் (1+8= 9) தேதியான இன்று வெளியிடப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X