»   »  ஓவியாவை பிடிக்கும்... அதற்காக திருமணம் செய்து கொள்கிறேன் என்றெல்லாம் டுவீட்டவில்லை... சிம்பு பளீச்

ஓவியாவை பிடிக்கும்... அதற்காக திருமணம் செய்து கொள்கிறேன் என்றெல்லாம் டுவீட்டவில்லை... சிம்பு பளீச்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியாவை நான் திருமணம் செய்து கொள்வதாக ஊடகங்களில் வெளயிடுவது போல் எந்த ஒரு டுவீட்டும் என்னுடைய டுவிட்டர் கணக்கில் இருந்து செல்லவில்லை என்று நடிகர் சிம்பு மறுப்பு தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 அல்லது 4 வாரங்களாக தொடர்ந்து சக போட்டியாளர்களால் ஓவியா எலிமினேட் செய்யப்பட்டாலும் அவரை பிக்பாஸ் வீட்டில் தக்கவைத்து கொள்ள மக்களும், ஓவியா ரசிகர்களும் அசராமல் வாக்களித்து வந்தனர். இது மற்ற போட்டியாளர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது.

 தனிமைப்படுத்திய போட்டியாளர்கள்

தனிமைப்படுத்திய போட்டியாளர்கள்

ஆரவ் ஓவியாவை காதலிப்பதாக கூறி ஏமாற்றி விட்டால் ஓவியா மன உளைச்சலில் உள்ளதாகவும் சக போட்டியாளர்கள் ஓவியாவின் நற்பெயரை கெடுக்க பல்வேறு யுத்தியை கையாண்டு வருவதாகவும் தெரிகிறது. இதனால் ஓவியாவை எரிச்சலூட்டும் செயல்களை காயத்ரி, சக்தி, ஜூலி ஆகியோர் செய்து வருகின்றனர். இதனால் கடந்த 2 நாள்களாக ஓவியா, தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று போராடி அவர் வெளியேறிவிட்டார்.

 டுவிட்டரில் சிம்பு

டுவிட்டரில் சிம்பு

கடந்த சில நாள்களுக்கு முன்பு சிம்புவின் டுவிட்டர் கணக்கில் இருந்து, ஓவியா உன்னை திருமணம் செய்ய ரெடி, தைரியமான பெண், உங்களுக்கு கடவுளின் ஆசிகள் என்று அவர் பதிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் பதிவான சில நிமிடங்களிலேயே அது நீக்கப்பட்டது.

 சிம்பு மறுப்பு

சிம்பு மறுப்பு

சிம்பு ஓவியாவை திருமணம் செய்ய விரும்புவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் அதை சிம்பு மறுத்துள்ளார். மேலும் அப்படி டுவீட் தன்னுடைய டுவிட்டர் கணக்கில் இருந்து செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 செய்தியை செக் செய்யுங்கள்

செய்தியை செக் செய்யுங்கள்

இது குறித்து சிம்பு தரப்பில் கூறுகையில், ஒரு செய்தி வந்தால், அதனை செக் செய்து கொள்ளாமல் ஊடகங்கள் வெளியிடுகிறார்கள். சிம்புவின் ட்விட்டர் கணக்கில் அப்படியொடு ட்வீட் வரவே இல்லை என்பது அனைவருக்குமே தெரியும். "ஒருவர் மற்றவர்களைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி, குற்றம்சாட்டுவதை விடுத்து, அவர்களை தனியாக விடுவது நல்லது. நான் யாரையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை. ஓவியா எப்படி இருக்கிறாரோ அது எனக்கு பிடித்திருக்கிறது. அவ்வளவுதான். தெளிவாக சொல்லிவிட்டேனா?" இது தான் சிம்பு தரப்பில் டுவீட் செய்யப்பட்டது.

English summary
A tweet from one of the fake accounts of STR stated that the actor is interested in marrying ‘Bigg Boss’ Oviya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil