»   »  மாணவர்கள் தங்களின் படிப்பறிவை இந்த சமுதாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும் - கார்த்தி

மாணவர்கள் தங்களின் படிப்பறிவை இந்த சமுதாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும் - கார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர்கள் தங்களின் படிப்பறிவை இந்த சமுதாயத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என நடிகர் கார்த்தி கூறியிருக்கிறார்.

சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 37 வது ஆண்டுவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவக்குமார், கார்த்தி, சூர்யா உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

விழாவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிவக்குமார் அறகட்டளை சார்பில் 10,௦௦௦ ரூபாய் வழங்கப்பட்டது.

37 வது ஆண்டுவிழா

37 வது ஆண்டுவிழா

+ 2 வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியரைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு வருடமும் அவர்களுக்கு பண உதவி செய்வதை சிவக்குமார் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சிவக்குமார் அறக்கட்டளையின் 37 வது ஆண்டுவிழா நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் கார்த்தி, சிவக்குமார், சூர்யா என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

சிவக்குமார்

சிவக்குமார்

37 ஆண்டுகளாக இதனை நடத்தி வரும் நடிகர் சிவக்குமார் ''ஏழைக் குழந்தைகள் படிப்பது எவ்வளவு சிரமம் என்பதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். நன்றாகப் படிக்கக் கூடிய குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். மாணவர்கள் தங்கள் கவனம் சிதறாமல் தொடர்ந்து படிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

சூர்யா

சூர்யா

நடிகர் சூர்யா பேசும்போது ''ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை இந்த சமுதாயத்துக்கு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.குறிப்பாக ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு விளக்கு கொண்டு இன்னொரு விளக்கை ஏற்றும் முயற்சி தான் நாம் செய்யும் நல்ல காரியமும்'' என்று கூறினார்.

கார்த்தி

கார்த்தி

''நல்ல செயல்களை செய் என்று அறிவுரை கூறாமல் எப்படி செய்வது என எங்கள் கண் முன்னால் எங்கள் பெற்றோர்கள் செய்து காட்டினார்கள்.இங்கே பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் படிப்பை சமுதாயத்துக்கு பயன்படுத்த வேண்டும்'' என்றார்.

English summary
''Students use their studies to the society'' Actor Karthi says in Recent Function.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil