twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்புவார் 'தல'! - ‘ஸ்டண்ட்’ சில்வா

    By Shankar
    |

    மங்காத்தா, வீரம், தற்போது என்னை அறிந்தால் என வரிசையாய் அஜீத் படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைத்து வருபவர் ‘ஸ்டண்ட்' சில்வா மாஸ்டர்.

    அப்படி என்னதான் உங்க கெமிஸ்ட்ரி என்று கேட்க அவருக்கே போன் செய்தால், காதல் ததும்ப ஒரு மெலோடி பாடல் ரிங்க்டோனாய் நம்மை வருடுகிறது. நொடிப் பொழுதில் நம்பர் மாறி உள்ளதா என்று பார்க்க. ‘Hello!' சொல்லுங்க , எப்படி இருக்கீங்க என்று கனிவாய் நலம் விசாரிக்க தொடங்கியவரை நிறுத்தி நமது பேட்டியை ஆரம்பித்தோம்.

    Stunt Siva speaks on Ajith

    தொடர்ந்து ‘தல' படங்கள் ஸ்டண்ட் செய்வதன் கரணம் என்ன?

    "அது எனக்கு தெரியலங்க, இயக்குநர் வெங்கட்பிரபு தான் என்னை அஜித் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். மங்காத்தாவின் சண்டை காட்சிகள் மிகவும் பேசப்பட்டது. சிவா சார்கூட முன்னரே பணி புரிந்திருந்ததால் வீரம் கிடைத்தது. அதில் ரயில் சண்டைக் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. இந்த படத்தில் அதே கூட்டணியை தொடர்ந்துள்ளார் கவுதம் சார். அவருடனும் விண்ணைத்தாண்டி வருவாயா , நடுநிசி நாய்கள் என நான்கு படங்கள் வேலை செய்துள்ளோம். அஜித்துக்கும் என்னை பிடிக்கும். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்".

    ‘வீரம்' ரயில் சண்டைக் காட்சி மாதிரி ‘என்னை அறிந்தால்' படத்தில் ஷ்பெஷல் ஏதும் உள்ளதா?

    "எல்லா ஸ்டண்ட்டும் ‘Live'ஆ செய்திருக்கிறோம். சில விஷயங்கள் படம் ரிலீஸ் முன்னாடி எப்படி சொல்வது..." என ஜகா வாங்கியவரை சமாளித்து பதிலை வாங்கினோம்.

    "அஜித் சார் எதாவது ஒரு ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்பி விட்டுவிடுவார். நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இந்த படத்தில் ‘தல' தன் தலையை வைத்து உண்மையான கண்ணாடியை உடைத்திருக்கிறார்."

    Stunt Siva speaks on Ajith

    டிரைலர்ல உங்க முகம் தெரிஞ்சதே... உங்க கதாபாத்திரத்தை பற்றி சொல்லுங்க...

    "என்னங்க, என்ன மாட்டி விடுறிங்க. சின்ன ரோல் தான் கவுதம் மேனன் நடிக்கச் சொன்னார் நடிச்சிட்டேன்."

    எல்லா ஸ்டண்ட் மாஸ்டர்க்கும் ஒரு முத்திரை பதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.. உங்களுக்கு அப்படி ஏதும் ஆசை இருக்கா?

    Stunt Siva speaks on Ajith

    எனக்கு தனியாக எந்த பெயரும் வாங்க வேண்டும் என்று ஆசையில்லை. படத்தின் கதையை மீறாமல், கதாபாத்திரத்தின் எல்லைகளை மீறாமல் சண்டை காட்சிகள் அமைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

    ‘தல'கூட ஷூட்டிங் போன அனுபவம் எப்படி இருந்தது?

    "சென்னைல நிறைய ஷூட் பண்ணினோம். எல்லாரிடமும் அக்கறையா இருப்பார். சண்டை காட்சிகளின்போது ஸ்பாட்டில் அனைவரது பாதுகாப்பை பற்றி பெரிதும் கவனம் கொள்வார். சிறு தவறு செய்தாலும் பெரியவர் சிறியவர் என்று பாராமல் உடனே ‘ஸாரி' கேட்டு விடுவார். ஸாரி மற்றும் தேங்ஸ் மனிதனின் ஈகோவைக் குறைத்து விடும் என்று அடிக்கடி கூறுவார். அவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். அவரது விடா முயற்சி என்னை பெரிதும் மலைக்க வைத்த ஒன்று. எதையும் முடியாது என்று கூறமாட்டார்."

    ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தமிழில் படங்களில் வேலை செய்கிறார்கள். அது பற்றி...

    அது ஆரோக்கியமான விஷயம். அவர்களது ‘பாணி‘ வேற மாதிரி இருக்கும். முன்னரே அனைத்தையும் திட்டமிட்டு வேலை செய்வார்கள் . எல்லா வகையிலும் பாதுகாப்பு வழிமுறைகளை ஆய்வு செய்து வேலையை தொடங்குவார்கள்.

    எப்படி ‘ஆன் தி ஸ்பாட்'ல திட்டமிடுகிறீர்கள் என்று அவர்கள் நம்மை பார்த்து கேட்பதுமுண்டு. ஹாலிவுட், பாலிவுட் என்று நமது ஸ்டண்ட் கலைஞர்கள் எல்லா மொழிகளிலும் வேலை செய்து வருகிறார்கள்," என்றார் ஸ்டன்ட் சிவா.

    English summary
    YennaiArinthaal Stunt Master Stunt Siva's interview about his working experience with Ajith.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X