»   »  பொறுக்கி சுந்தர்.சி!

பொறுக்கி சுந்தர்.சி!

Subscribe to Oneindia Tamil

பொறுக்கி என்ற புதிய படத்தில் நடிக்க புக் ஆகியுள்ளார் சுந்தர்.சி.

தமிழில் ஹிட் ஆன படங்களை ரீமேக் செய்யும் டிரெண்ட் கோலிவுட்டில் படு வேகமாக பரவி வருகிறது. நான் அவனில்லையின் ரீமேக் சூப்பர் ஹிட் ஆனதால் தொடர்ந்து பல படங்களை தூசு தட்டி ரீமேக் செய்யும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

பில்லா ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அடுத்து காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் செய்யத் தயாராகி வருகிறார் மனோபாலா. இப்படி பல படங்கள் புதுப் பொலிவுடன் கலகலக்க வைக்க வருகின்றன.

அந்த வரிசையில், ரொம்ப காலத்திற்கு முன்பு ஜெய்சங்கர், வரலட்சுமி, ஜெமினிகணேசன் நடிப்பில் வெளி வந்த நீயா நானா படமும் ரீமேக் ஆகப் போகிறது.

பொறுக்கி என்ற பெயரில் இப்படத்தை ரீமேக் செய்கின்றனர். இதில் நடிக்கவிருப்பது சுந்தர்.சி. மாமியார், மருமகனுக்கு இடையிலான மோதல்தான் இப்படத்தின் கதை.

இதில் மருமகனாக நடிக்கிறார் சுந்தர்.சி. அவரது மாமியாராக வருபவர் அந்தக் கால நாயகி நதியா. படத்தை தயாரித்து, இயக்கப் போகிறவர் ஷக்தி சிதம்பரம்.

சீரியஸான மாமியார், மருமகன் கதையை, காமெடி கலந்து தனது பாணியில் தடபுடலாக அளிக்கவுள்ளாராம் ஷக்தி சிதம்பரம்.

சுந்தர்.சி. காட்டில் இப்போது பெரும் மழையாம். கை நிறையப் படங்களுடன் படு சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டிருக்கும் சுந்தர். சியால் தனது மனைவி குஷ்புவுக்கே (நடிக்கத்தான்) கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிசியாக இருக்கிறாராம்.

சுந்தர்.சி. ஹீரேவாக நடித்துக் கொண்டிருக்கும் பெருமாள், தீ உள்ளிட்ட படங்களில் அவருடன் புதிய காமெடி நாயகன் ஜோடி போட்டு அசத்திக் கொண்டிருக்கிறார். வழக்கமாக சுந்தர்.சி.யின் படங்களில் காணப்படும் வடிவேலுவுடன், லடாய் ஏற்பட்டு விட்டதால் அந்த இடத்திற்கு விவேக் வந்துள்ளார்.

எல்லாம் சரி ஷக்தி சார், அதென்ன பொறுக்கி என்று ஒரு டைட்டில்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil